dinamalar telegram
Advertisement

ஊராட்சி தலைவர்கள் மதிப்பூதியம் உயர்வு

Share
சென்னை:ஊராட்சி தலைவர்களுக்கு வழங்கப்படும், மாதாந்திர மதிப்பூதியம் 2,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
'ஊரக பகுதிகளின் வளர்ச்சியில், ஊராட்சி தலைவர்களின் பங்களிப்பு முக்கியமானது.'எனவே, அவர்களை மேலும் ஊக்குவிக்கும் விதமாக, ஊராட்சி தலைவர்களுக்கு வழங்கப்படும், மாதாந்திர மதிப்பூதியம் 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்படும்' என, சட்டசபையில், ஊரக வளர்ச்சித் துறை மானிய கோரிக்கையின் போது, அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்தார்.
இதற்கான கருத்துருவை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் அரசுக்கு அனுப்பினார். மொத்தம், 12 ஆயிரத்து 525 ஊராட்சிகள் உள்ளன. இதன் தலைவர்களுக்கு, மாதம் 2,000 ரூபாய் வீதம், ஓராண்டுக்கு வழங்க 30.06 கோடி ரூபாய் ஒப்பளிப்பு செய்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்த செலவினத்தை, தொடர்புடைய கிராம ஊராட்சியின் மாநில நிதிக்குழு மானிய நிதியில் இருந்து அல்லது கிராம ஊராட்சியின் சொந்த வருவாயில் இருந்து மேற்கொள்ளலாம். இந்த மதிப்பூதியம், தனி அலுவலர்கள் பொறுப்பு வகிக்கும் கிராம ஊராட்சிகளுக்கு பொருந்தாது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement