dinamalar telegram
Advertisement

பொதுமக்களிடம் கனிவு காட்டுங்க! போலீஸ் கமிஷனர் அறிவுரை

Share
கோவை: 'ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம், கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்' என்று போலீசாருக்கு கமிஷனர் பிரதீப் குமார் அறிவுரை வழங்கியுள்ளார்.கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் தலைமையில் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், சிறப்பு பிரிவு உதவி கமிஷனர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.இதில் கமிஷனர் பேசியதாவது:மாநகரில் சட்டம், ஒழுங்கை பேணிக்காப்பதில் எந்தவித பாரபட்சமும் காட்டாமல், நேர்மையான முறையில் போலீசார் நடந்து கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்வோர், கந்து வட்டி வசூலிப்பவர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள், ரவுடியிசத்தில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுப்பது முக்கியம்.புகையிலை, பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்வோர், கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை செய்வோர், லாட்டரி விற்பனை செய்வோர், சூதாட்டம், விபச்சாரம் செய்வோர், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.போலீசார் அனைவரும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சைபர் குற்றங்கள், போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வை, பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.போலீஸ் ஸ்டேஷன்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம், கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார், ரோந்து செல்லும்போது பொதுமக்களுடன் நல்லுறவு ஏற்படும் வகையில், நடந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, கமிஷனர் அறிவுரை வழங்கினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement