dinamalar telegram
Advertisement

மாநகராட்சிக்கு திரும்பி வரும் பிளாஸ்டிக் வாக்காளர் அட்டை

Share
கோவை: தபால் துறை மூலமாக வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்குவதற்காக அனுப்பப்பட்ட, புதிய பிளாஸ்டிக் வாக்காளர் அடையாள அட்டைகள், கோவை மாநகராட்சிக்கு திரும்பி வந்துள்ளன.வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பவர்கள், முகவரி மாற்றம் செய்பவர்கள், திருத்தம் மேற்கொள்பவர்கள் அல்லது புதிய அட்டை கேட்டு விண்ணப்பிப்போருக்கு, இந்திய தேர்தல் ஆணையம், வண்ண புகைப்படத்துடன் கூடிய பிளாஸ்டிக் அடையாள அட்டை வழங்கி வருகிறது. இதை, வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று வழங்க வேண்டுமென்பதற்காக, தபால்துறையுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது.வாக்காளர் அட்டை தயாரானதும், தபால்துறையில் ஒப்படைக்கப்படுகிறது.
தபால் கொடுக்கச் செல்லும்போது, அடையாள அட்டையை வழங்க வேண்டும். வீட்டில் சம்பந்தப்பட்டவர்கள் இல்லையெனில், மொபைல் போனுக்கு தகவல் கொடுத்து, அவர்களை வரவழைத்து கொடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு, 1.5 லட்சம் புதிய அடையாள அட்டை வந்திருக்கிறது.முகவரியில் வாக்காளர் இல்லை; சரியான முகவரி இல்லை என கூறி, 1,000க்கும் மேற்பட்ட வாக்காளர் அட்டைகளை, மாநகராட்சி வசம் தபால் துறை திருப்பி வழங்கியுள்ளது.இதை, மாநகராட்சி ஊழியர்கள், ஏரியா வாரியாக பிரித்துக் கொண்டிருக்கின்றனர். வாக்காளர் அடையாள அட்டை கிடைக்காதவர்கள், மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து, குவியலில் இருந்து, அவர்களே தேடிக்கண்டுபிடித்து, பெற்றுச் செல்கின்றனர்.முகாம்களில் வினியோகம்தேர்தல் பிரிவினர் கூறுகையில், 'அந்தந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வழங்கியிருந்தால், சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு சேர்ப்பித்திருக்க முடியும். தபால்துறையினருக்கு அனைத்து வீதிகளும் தெரியும் என்பதாலேயே, அவர்கள் மூலமாக பட்டுவாடா செய்ய அறிவுறுத்தப்பட்டது. புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம் நடக்கும் இடங்களுக்கு கொண்டு சென்று, அங்கு வருவோரிடம் விசாரித்து நேரில் வழங்கி வருகிறோம்' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement