dinamalar telegram
Advertisement

157 பறிமுதல் வாகனம் டிசம்பர் 8ம் தேதி ஏலம்

Share
கோவை: கோவை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 133 டூவீலர்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள் உட்பட, 157 வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளன.டிச., 8ம் தேதி காலை 10:00 மணிக்கு கோவை, அவிநாசி ரோடு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நடக்கும் ஏலத்தில், 133 டூவீலர்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 17 நான்கு சக்கர வாகனங்கள், 5 ஆறு சக்கர வாகனங்கள் என, 157 வாகனங்கள் இடம் பெறும்.இவ்வாகனங்கள் பொள்ளாச்சி, வெங்கடேசா காலனியில் உள்ள மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகம், கோவில்பாளையத்தில் உள்ள மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகம், சூலுார், மதுக்கரை, க.க.சாவடி, மேட்டுப்பாளையம், செட்டிபாளையம், தொண்டாமுத்துார், நெகமம், வால்பாறை பகுதிகளில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.ஏலம் எடுக்க விரும்புவோர், டிச., 7ம் தேதி மாலை 5:00 மணிக்குள் அந்தந்த மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் போலீஸ் ஸ்டேஷன்களில் பார்வையிடலாம். ஏலத்தில் எடுக்கும் வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி., உண்டு.இத்தகவலை, மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement