கிறிஸ்தவ பெண் மத போதகரின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம்
கீழக்கரை : காஞ்சிபுரம் அருகே குன்றத்துார் சர்ச்சில் ஜெபக்கூட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தை பற்றி அவதுாறாக பேசிய பெண் மத போதகர் பியூலா செல்வராணி, சர்ச் பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரவையின் கவுரவ ஆலோசகர் கீழக்கரையை சேர்ந்த முருகேசன் கூறியதாவது; நவ.21ல் குன்றத்தூரில் சர்ச்சில் நடந்த ஜெபக்கூட்டத்தில் மத போதகர் பியூலா செல்வராணி மளிகை கடை நடத்தி வரும் குறிப்பிட்ட சமுதாயத்தைப் பற்றி கொச்சைப்படுத்தி, தவறாக பேசியுள்ளார்.பியூலா செல்வராணி மீதும் சம்பந்தப்பட்ட சர்ச்சின் பாதிரியார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹிந்து மதம் குறித்து அவதூறான கருத்துக்களையும் குறிப்பிட்ட ஜாதியை வன்மத்தோடு பேசுவதையும் தவிர்க்க வேண்டும். இது குறித்து தமிழக அரசுக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது ,என்றார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!