dinamalar telegram
Advertisement

துாத்துக்குடி விமானம் திருச்சியில் தரையிறக்கம்

Share
சென்னை:சென்னையில் இருந்து துாத்துக்குடிக்கு, 35 பயணி யருடன் சென்ற 'இண்டிகோ' விமானம் மோசமான வானிலை காரணமாக, திருச்சிக்கு திருப்பிவிடப்பட்டது.

சென்னையில் இருந்து நேற்று பகல் 1:55 மணிக்கு, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணியர் விமானம், துாத்துக்குடி புறப்பட்டு சென்றது. அதில், தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு உட்பட 35 பயணியர் பயணித்தனர்.விமானம் துாத்துக்குடியை நெருங்கிய போது, அங்கு பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்து, மோசமான வானிலை நிலவியது.
இதனால், துாத்துக்குடியில் விமானம் தரையிறங்க முடியாமல், சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.சென்னைக்கு திரும்பிய விமானம், திடீரென திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. துாத்துக்குடியில் வானிலை சீரடைந்த பின், மீண்டும் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement