dinamalar telegram
Advertisement

பரமக்குடியில் காங்., பாதயாத்திரை

Share
பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்ட காங்., சார்பில், மத்திய அரசை கண்டித்து பரமக்குடியில் பாதயாத்திரை நடந்தது.

மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். மாநில காங்., செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மாநில செயலாளர் ஆனந்த் குமார், மாநில நெசவாளர் அணி செயலாளர் கோதண்டராமன்,பொதுச்செயலாளர்கள் ஆலம், ஜோதிபாலன், முன்னாள் நகர தலைவர் அஜீஸ், உட்பட பலர் பங்கேற்றனர்.பரமக்குடி நகராட்சி முன்பு துவங்கிய பாதயாத்திரை பஜார் வழியாக காந்தி சிலை முன்பு நிறைவடைந்தது.

அப்போது பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைத்திடவும், வேளாண் சட்டங்களை இரு அவைகளிலும் ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை விற்கக்கூடாது. உரம் மானியம் வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி., வரியை குறைக்க வேண்டும். நீட் தேர்வை நீக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement