dinamalar telegram
Advertisement

கோவை பள்ளி மாணவி இறப்புக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்

Share
பரமக்குடி : பரமக்குடி காந்தி சிலை முன்பு, கோவை பள்ளி மாணவி யை தற்கொலைக்கு தூண்டிய பள்ளி ஆசிரியருக்கு தண்டனை வழங்க வலியுறுத்தி, தேசிய செட்டியார் பேரவை, பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பேரவைத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தலைமை வகித்தார். பரமக்குடி ஆயிரவைசிய சபை தலைவர் போஸ், முன்னாள் தலைவர் பாலுச்சாமி, பள்ளி செயலாளர் லெனின் குமார், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் ஜெகநாதன் முன்னிலை வகித்தனர். பொறுப்பாளர் பாலச்சந்தர் வரவேற்றார்.

ஜெகநாத் மிஸ்ரா பேசியபோது: கோவை பள்ளி மாணவி இறப்பில் தொடர்புடைய பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, முதல்வர் மீரா ஜாக்சன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த மாணவியின் சகோதரிக்கு அரசு வேலைவாய்ப்பு, குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க ஆசிரியருக்கு துாக்கு தண்டனை வழங்க வேண்டும், என்றார்.பேரவை பொதுச் செயலாளர் பெரிய சேகரன், கல்வியாளர் பால கார்த்திகேயன், மாவட்ட ஐக்கிய ஜமாத் பொதுச்செயலாளர் ஆலம், சுதாகர், செந்தில், இளையராஜா, கோபி, லோகநாதன் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement