dinamalar telegram
Advertisement

சென்னை -- ஷீரடி விமானம் ரத்து

Share
Tamil News
சென்னை:சென்னையில் இருந்து ஷீரடி செல்லும் 'ஸ்பைஸ் ஜெட்' விமான சேவை, மோசமான வானிலை காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டது; விமான ஊழியர்களுக்கும், பயணியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து ஷீரடி செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம், நேற்று பகல் 1:55 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த விமானத்தில் 190 பயணியர் பயணிக்க இருந்தனர். பகல் 12:30 மணியளவில், சென்னை விமான நிலையத்திற்கு பயணியர் வந்தபோது, விமானம் அரை மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.சற்று நேரத்திற்கு பின், ஷீரடியில் மோசமான வானிலை நிலவுவதால், விமானம் ரத்து செய்யப்படுவதாகவும், விமானம் இன்று ஷீரடிக்கு புறப்படும் என்றும், விமான நிறுவன ஊழியர்கள் அறிவித்தனர்.
ஷீரடிக்கு பயணிக்க வேண்டும் எனில், 48 மணி நேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை செய்து, 'நெகட்டிவ்' சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். நேற்றைய பயணம் ரத்தானதால், பரிசோதனை சான்றிதழ் காலாவதியாகி விடும்.பின், புதிதாக சோதனை செய்து, நெகட்டிவ் சான்றிதழ் காண்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, புதிய நெகட்டிவ் சான்றிதழ் அளிக்க, தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என, அந்த பயணியர் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகளும், பாதுகாப்பு அதிகாரிகளும், பயணியரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.இதேபோல, ஷீரடியில் இருந்து நேற்று மாலை 5:55 மணிக்கு, சென்னை வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் பயணியர் விமானமும், மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து ஷீரடி செல்ல இருந்த பயணியர் கூறியதாவது:ஷீரடிக்கு செல்வதற்காக மூன்று முறை வந்து, மூன்று முறையும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்றும் ஷீரடி செல்லும் விமான சேவை ரத்தாகி உள்ளது. ஸ்பைஸ் ஜெட் சேவை சரியாக இல்லை. இதில் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் பயணியர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, ஸ்பைஸ் ஜெட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
'ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம், தினமும் சில நகரங்களுக்கான விமான சேவையை ரத்து செய்கிறது. இதனால், அதன் ஊழியர்களுக்கும், பயணியருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் நடைபெறுகிறது' என, விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement