dinamalar telegram
Advertisement

கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட இன்று அ.தி.மு.க., விருப்ப மனு

Share
கோவை: கோவை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட, கட்சியினரிடம் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சியை, அ.தி.மு.க., இன்று (26ம் தேதி) துவக்குகிறது; வரும், 28ம் தேதி மாலை, 5:00 மணி வரை வழங்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. டிச., 9ல் வார்டு வாரியான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதைத்தொடர்ந்து, தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்பதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராக ஆரம்பித்து விட்டன.கோவை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.,வினருக்கு, இன்று முதல் 28ம் தேதி மாலை, 5:00 மணி வரை, மாவட்ட தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில், விருப்ப மனு வழங்கப்பட உள்ளது.மனுவை பூர்த்தி செய்து, ரூ.5,000 கட்டணம் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே விருப்ப மனு செலுத்தியவர்கள், பணம் செலுத்தியதற்கான ரசீதை காட்டி, விருப்ப மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து கொடுக்கலாம் என, மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுனன் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்வை, முன்னாள் அமைச்சர் வேலுமணி, மாவட்ட செயலாளர்கள் அம்மன் அர்ச்சுனன், அருண்குமார் ஆகியோர் இன்று காலை, 9:00 மணிக்கு துவக்கி வைக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement