dinamalar telegram
Advertisement

காட்டின் வளம் பேசும் வனம் தியேட்டரில் இன்று ரிலீஸ்!

Share
சென்னை:காடுகளையும், பழங்குடியினத்தவரின் சிறப்பையும் பேசும், வனம் படம் இன்று தியேட்டரில் வெளியாகிறது.தப்புத்தண்டா படத்தை இயக்கிய ஸ்ரீகந்தன் ஆனந்த் இயக்கியுள்ள படம், வனம். எட்டு தோட்டாக்கள், ஜீவி படப்புகழ் வெற்றி, நாயகனாக நடித்துள்ளார்.ஸ்மிருதி வெங்கட், அனு சித்தாரா, வேல ராமமூர்த்தி, அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்ய, ரான் ஈதன் யோஹன் இசையமைத்துள்ளார்.இப்படம் இன்று தியேட்டரில் வெளியாகிறது.மாணவர் விடுதி அறையில் நிகழும் மர்ம தற்கொலைகளும், அதன் பின்னணியில், ஜமீன்தாரின் வெறியாட்டத்தோடு, அமானுஷ்ய சக்தி களையும் இணைத்து கதைக்களம் அமைத்து உள்ளனர்.குறிப்பாக, காடுகளின் முக்கியத்துவத்தையும், பளியர் என்ற பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் இப்படத்தில் எடுத்துரைத்துள்ளது சிறப்பம்சம்.

முக்கியமாக படத்திற்காக, இரண்டு மாதம் கடுமையாக உழைத்து, படப்பிடிப்பு தளத்தை கச்சிதமாக தேர்வு செய்து உள்ளனர்.படத்தின் பெரிய பலமே ஒளிப்பதிவு தான். விக்ரம் மோகனுக்கு இது முதல் படம்.தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்துள்ளார். காட்டுக்குள்ளேயே சென்று வந்த பிரமிப்பை, வனம் படத்தை பார்க்கும் போது உணரலாம். பின்னணி இசை படத்திற்கே உரிய மிரட்டல். படத்தை கோல்டன் ஸ்டார் ஸ்டூடியோ சார்பில் கிரேஸ் ஜெயந்தி ராணி, ஜே.பி.அமலன், ஜே.பி.அலெக்ஸ் தயாரித்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement