dinamalar telegram
Advertisement

கண்மாய் பாசனத்தை நம்பியுள்ள திருப்புத்தூர் விவசாயிகள் ஏமாற்றம்

Share
திருப்புத்துார் : திண்டுக்கல்லில் போதிய மழையின்றி பாலாறு, விருசுழியாற்றில் நீர்வரத்து இல்லாததால் கண்மாய் பாசனத்தை நம்பியுள்ள திருப்புத்துார் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

திருப்புத்துார், எஸ்.புதுார், சிங்கம்புணரி பகுதியில் 55 பொதுப்பணித்துறை கண்மாய் உட்பட 300க்கும் மேற்பட்ட பாசன கண்மாய்கள் உள்ளன. நல்ல மழை காலத்தில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கரந்தமலையில் உற்பத்தியாகும் மழை நீர் பாலாறு, விருசுழியாறுகளில் பெருக்கெடுத்து ஓடி எஸ்.புதுார், சிங்கம்புணரி, திருப்புத்துார் பகுதி கண்மாய்களை நிரப்பி செல்லும். இதனால் இப்பகுதி கண்மாய் பாசன விவசாயிகள் அதிக பயன்பெறுவர். விவசாயமும் செழிப்பாக நடைபெறும்.

ஆனால், தற்போது தமிழக அளவில் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. ஆனால் பாலாறு, விருசுழியாற்றிற்கு நீர் ஆதாரமாக உள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் மழை போதிய அளவில் பெய்யாதாததால் கரந்தமலையில் நீர் பெருக்கெடுத்து ஓடவில்லை. இதனால் கொட்டி தீர்க்கும் மழை காலத்தில் கூட பாலாறு மற்றும் புதுக்கோட்டை முருக்கணி கண்மாயில் இருந்து விருசுழியாற்றிற்கும் தண்ணீர் வரவில்லை.

கடலோர பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே மழை பெய்து வருகிறது. இதனால் பாலாறு, விருசுழியாற்றில் நீர்வரத்தின்றி திருப்புத்துார், எஸ்.புதுார், சிங்கம்புணரி கண்மாய்களில் நீர்சேகரமாகவில்லை. கண்மாய் பாசனத்தை நம்பிய விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement