dinamalar telegram
Advertisement

சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் புதிதாக 1.01 லட்சம் பேருக்கு ஓய்வூதியம்

Share
Tamil News
சென்னை:சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், புதிதாக 1.01 லட்சம் பயனாளிகள் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
தமிழகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், 33 லட்சத்து 31 ஆயிரத்து 263 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இத்திட்டங்களுக்கு, நடப்பு நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட்டில் 4,807.56 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.தற்போது, சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், ஓய்வூதியம் கோரி புதிதாக வரப்பெற்ற விண்ணப்பங்களில், 1.01 லட்சம் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கண்டறியப்பட்டனர்.
இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 48 ஆயிரத்து 77; இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 1,359; இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 4,346; மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதிய திட்டத்தில், 14 ஆயிரத்து 739. ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதிய திட்டத்தில், 28 ஆயிரத்து 209; முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் 2,397; கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்றோர் ஓய்வூதிய திட்டத்தில் 1,732 பேர், 50 வயதுக்கு மேற்பட்ட ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் 554; முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் 61 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மொத்தம் ஒரு லட்சத்து 1,474 பயனாளிகளுக்கு, ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்குவதற்கு அடையாளமாக, நேற்று தலைமை செயலகத்தில், 10 பயனாளிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன், தலைமை செயலர் இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி, வருவாய் துறை செயலர் குமார் ஜெயந்த் மற்றும் அதிகாரிகள்பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement