dinamalar telegram
Advertisement

மதம் மாறியவருக்கு கலப்பு திருமண சான்று வழங்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

Share
சென்னை: மதம் மாறியவர்களுக்கு, கலப்பு திருமணத்திற்கான சான்று வழங்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த கிறிஸ்தவ ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கிறிஸ்தவ ஆதி திராவிடர் என்பதால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என சாதிச் சான்று பெற்ற அவர், தனக்கு கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மேட்டூர் வட்டாட்சியர், மதம் மாறியவருக்கு கலப்பு திருமணச் சான்று வழங்க முடியாது எனக் கூறி, அவரது விண்ணப்பத்தை நிராகரித்தார்.
இதனை எதிர்த்து பால்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று (நவ.,25) விசாரணைக்கு வந்தது. அப்போது, 'மதம் மாறுவதால் ஒருவரின் சாதி மாறுவதில்லை' எனக் குறிப்பிட்ட நீதிபதி, 'ஒரே சாதியையோ, வகுப்பையோ சேர்ந்த கணவன், மனைவிக்கு கலப்பு திருமண சான்று பெற தகுதியில்லை' எனக் குறிப்பிட்டார். மேலும், 'மதம் மாறியவருக்கு கலப்பு திருமணச் சான்றிதழ் வழங்கினால், கலப்பு மணம் புரிந்தவர்களுக்கான சலுகைகள் தவறாக பயன்படுத்தக் கூடும்' எனவும் கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (43)

 • v.subramanian - madurai,இந்தியா

  நிறையபேர் சொன்னதுபோல் மதம் மாறியவர்களை இட ஒதுக்கீட்டில் பொதுப்பட்டியலில் சேர்க்கவேண்டும்

 • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

  அங்கே நடக்கும் சாதி சண்டை தெருக்கூத்து வேற எங்கேயும் கிடையாது. தனி தனி சர்ச், தனி தனி கல்லறை. தனி தனி சர்ச் நிர்வாகம் இன்னும் பல. எங்கள் மதத்தில் சாதி வேறுபாடு கிடையாது என்று அப்பாவி ஏழைகளை மதமாற்றம் செய்யும் இவர்கள், மதம் மாறியும், ஹிந்துக்களின் பெயர்களை வைத்து கொண்டு ஏழை தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒதுக்கீட்டை திருடுவது என்ன நியாயம்?

 • Venkat Subbarao - Chennai,இந்தியா

  இனிய அருமையான தீர்ப்பு

 • சீனி - Bangalore,இந்தியா

  அம்பேத்கர் எந்த சமூகத்திற்று நீதி கிடைக்கவேண்டும் என்று பாடுபட்டாரோ, அவர்களை வஞ்சித்து அரசியல் நடத்திவரும், மதமாற்ற கும்பல்கள் அவர்களை சுரண்டிவரும் வேலையில், இந்த தீர்ப்பு மிகசரியானதான் உள்ளது. இந்த மண்ணில் கலாச்சாரத்தை துறந்து, வெளிநாட்டு மதத்திற்க்கு மாறியவர்களை ஓப்பன் கோட்டாவில் (பொதுப்பிரிவில்) கொண்டுவருவது தான் சரி. ஏன்னா அவர்களுக்கு தான் ஓட்டு போடும் பவர், பல கல்வி நிறுவனங்கள் உள்ளன, வெளினாட்டில் இருந்து தேவையான பணமும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அப்புறம் எதற்க்கு அவர்களை இன்னும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று சொல்லவேண்டும். அரசு கோட்டா சலுகை, இந்து காலாச்சாராத்துடன் ஒன்றி வாழும் ஜாதிகளுக்கும், இந்த மண்ணின் மைந்தர்களுக்கும் என்று அறிவித்தால் மிகச்சிறப்பானதாக் இருக்கும். எத்தனையோ அடித்தள தொழிலாளர்கள் (தெருக்களை சுத்தம் செய்பவர்கள், சவரத்தொழிலாளிகள், சலவை தொழிலாளர்கள், செருப்பு தயாரித்தவர் முதல், பறை இசைப்பவர், நிலமற்ற விவசாய கூலிகள்) இந்தியாவில் உள்ளனர், அவர்கள் வாழ்வில் மேலே வருவதற்க்குதான் அம்பேத்கர் சலுகை கேட்டார், இப்படி மதம்மாறி வாயையும் வயிற்றையும் நன்கு வளர்த்தவகளுக்காக இல்லை. இந்துக்கள், இறைவன் முன் எல்லா சாதியும் சமம் என்ற நிலை வந்தால் தான் நாட்டுக்கு நல்லது.

  • raja - Cotonou,பெனின்

   அவரே அவரோட ஜாதிய சொல்ல பிடிக்காமத்தான் பவுத்த மதத்திற்கு மாறினார்....

  • Guru Nathan - Chennai,இந்தியா

   என்ன படிச்சாலும் தாழ்வு மனப்பான்மை போகல. அம்பேத்கார் ஒரு ப்ராமண பெண்ணை தான் மணந்தார் . தாழ்வு மனப்பான்மை என்னும் வியாதிய குணப்படுத்த முடியாது .

  • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

   அங்கேயும் சாதி உள்ளது

 • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

  கிருத்துவ மதத்தில் சேரும் அல்லது மதத்திற்கு மாறும்போது கீழ் கண்ட விபரங்களை வாங்கி வைக்க வேண்டும். 1. எந்த மதத்தில், எந்த ஜாதியில் இருந்து மாறுகிறார். 2. என்ன காரணம் 3. ஏற்கனவே சலுகைகளை ஜாதி அடிப்படையில் பெற்று இருந்தால் அதை துறக்கும் கடிதம். 4. அவர்களுக்கு பிறக்கும் வாரிசுகளுக்கு சலுகை வேண்டாம் என்று பிரமாண பத்திரம். 5. அவர்களுடைய ஞான ஸ்நானம் நடைபெற்ற நாள், புதிய பெயர் ஆதார் விவகாரம், PAN, driving license மற்ற முக்கிய ஆவணங்களில் மாற்றம் ஆகியவற்றை அரசிடம் மாதம் ஒரு முறை கொடுக்கவேண்டும் திருச் சபைகளில் இந்த விவரத்தை ஒவ்வொரு கூட்டங்களிலும் தெரிவிக்க வேண்டும் மதம்.மாறிய மக்களின் அரசு பதிவுகள் அந்த அந்த திரு சபைகளுக்கு தெரிய படுத்திய பிறகே, அவர்களை கிருத்துவர்கள் ஆக அங்கீகரித்து பிரார்த்தனை கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதிக்கவேண்டும். தவறினால் திருச்சபை அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

  • சீனி - Bangalore,இந்தியா

   ரகசியக்காப்பு பிரமாணம் செய்திவிட்டு தான் மதம் மாற்றுவார்கள். திருமாவே ஒரு கிருத்துவர்தான், ஆன இந்து, பறையர் என்று சான்றிதழ் வைத்துக்கொண்டு வெட்கமில்லாமல் ஏழைகளுக்கான சலுகைகளை அனுபவித்து வருகிறார்.

  • Imayan - Madurai,இந்தியா

   அருமை அருமை. பத்திரத்தை வாங்கிவிட்டு அரசு அவர்களுக்கு ஜாதி அற்றவர்கள் மற்றும் அவர்கள் நம் நாட்டின் முன்னணி பிரஜைகள் என்று மாற்று பத்திரம் வழங்கும்.

Advertisement