dinamalar telegram
Advertisement

ஆளில்லை என்றால் அந்தமானில் இருந்து அழைத்து வருவேன்: ராமதாஸ் சவால்

Share
கடலூர்: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆள் இல்லை என்றால் அந்தமானில் இருந்து 50 பேரை அழைத்து வந்திருப்பேன் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

பா.ம.க சார்பில் ஒருங்கிணைந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடலூரில் இன்று (நவ.,25) நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சிறப்பான வழக்கறிஞரை நியமனம் செய்துள்ளது. எனவே, தடை உத்தரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. வரும் தேர்தலில் பா.ம.க வெற்றி பெற்று அன்புமணி ராமதாஸ் முதல்வராக கட்சியினர் சபதம் ஏற்க வேண்டும். இதற்காக திண்ணை பிரசாரம், சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்தி மக்களிடையே செல்ல வேண்டும்.
23 லட்சம் ஓட்டுகள் போட்டு 5.6 சதவீதம் பெற்றதாக கூறுகின்றனர். தமிழகத்தில் 3வது பெரிய கட்சியாக இருப்பது எனக்கு வெட்கமாக இருக்கிறது. இந்த கட்சி இனி இளைஞர்களின் கைகளில் தான் இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிட ஆள் இல்லை என்கின்றனர். ஆளில்ல என்றால் அந்தமானில் இருந்து 50 பேரை அழைத்து வந்திருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (64)

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    ''அந்தமானை பாருங்கள் அழகு ???

  • vbs manian - hyderabad,இந்தியா

    நகைச்சுவை அதிகமாகிக்கொண்டே போகிறது.

  • Indhuindian - Chennai,இந்தியா

    அங்கே கிடைக்கலேன்னா கவலை படாதீங்க அப்படியே நார்த் சென்தினில் தீவுன்னு ஒன்னு இருக்கு அங்கே எந்த கட்சியும் கிடையாது அங்கே போயி உங்க கொடிய நட்டுடுங்க ஆனா ஒன்னு அந்த தீவு கிட்டே போனாலே அவங்க அம்பு போடுவாங்க ஆனா அதுக்கெல்லாம் பயப்படக்கூடாது

  • பாலா - chennai,இந்தியா

    இன்னா டமாஸா பேசறாரு பாருய்யா ╰(°▽°)╯

  • Nesan - JB,மலேஷியா

    ஆளில்லை என்றால் அந்தமானில் இருந்து மட்டுமில்லை ஆகாயத்திலிருந்து அழைத்து வருவார். படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோவில் கதை தான் இவர் வாய் சவடால்

Advertisement