புதுடில்லி: எல்லை பகுதிகளில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்திய விமானப்படைக்கு இரண்டு மிராஜ் 2000 போர் விமானங்களை பிரான்ஸ் வழங்கி உள்ளது.
பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட இந்த விமானம், சமீபத்தில் இந்திய விமானப்படை அதிகாரிகளுடன் குவாலியர் வந்தடைந்தது. விரைவில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில், இந்த போர் விமானங்கள் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளது.
மிராஜ் போர் விமானங்களின் எண்ணிக்கையை 50 ஆக உயர்த்தும் நடவடிக்கையின்படி, இந்த 2 போர் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. பல கட்டங்களாக, இதுவரை 51 மிராஜ் விமானங்களை வாங்கியுள்ள விமானப்படை அதனை 3 படைப்பிரிவுகளாக பிரித்து, குவாலியர் விமான படைதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், 51 மிராஜ் போர் விமானங்களின் திறனை மேம்படுத்துவது தொடர்பாக இந்தியா - பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் உள்ளது. ஆனால், சில விமானங்கள் விபத்திற்குள்ளானதால், சில பாகங்கள் உதிரியாக உள்ளன. இவற்றை, தற்போது வாங்கப்பட்டுள்ள 2 விமானங்களிலும் பயன்படுத்தி, போர் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த விமானப்படை திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 1980 முதல் மிராஜ் ரக போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படுகின்றன. கார்கில் போர் முதல் 2019ல் பாகிஸ்தானின் பாலகோட்டில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், இந்த விமானங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. கார்கில் போரின் போது, டைகர் ஹில்டாப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ முகாம்களுக்கும், பதுங்கு குழிகளுக்கும் மிராஜ் விமானங்கள் பலத்த சேதத்தை ஏற்படுத்தி, இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளம் இட்டன.
பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட இந்த விமானம், சமீபத்தில் இந்திய விமானப்படை அதிகாரிகளுடன் குவாலியர் வந்தடைந்தது. விரைவில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில், இந்த போர் விமானங்கள் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளது.

மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், 51 மிராஜ் போர் விமானங்களின் திறனை மேம்படுத்துவது தொடர்பாக இந்தியா - பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் உள்ளது. ஆனால், சில விமானங்கள் விபத்திற்குள்ளானதால், சில பாகங்கள் உதிரியாக உள்ளன. இவற்றை, தற்போது வாங்கப்பட்டுள்ள 2 விமானங்களிலும் பயன்படுத்தி, போர் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த விமானப்படை திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 1980 முதல் மிராஜ் ரக போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படுகின்றன. கார்கில் போர் முதல் 2019ல் பாகிஸ்தானின் பாலகோட்டில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், இந்த விமானங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. கார்கில் போரின் போது, டைகர் ஹில்டாப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ முகாம்களுக்கும், பதுங்கு குழிகளுக்கும் மிராஜ் விமானங்கள் பலத்த சேதத்தை ஏற்படுத்தி, இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளம் இட்டன.
பிரான்ஸ் இடம் இருப்பது ரபில் போர் விமானம் தானே .