கவுகாத்தி: மேகாலயா முன்னாள் முதல்வர் முகுல் சங்மா தனது ஆதரவாளர்களான 11 எம்.எல்.ஏ.,க்களுடன் காங்கிரஸில் இருந்து வெளியேறி திரிணமுல் காங்கிரஸில் இணைந்தார். எதிர்க்கட்சியாக செயல்படுவதில் காங்கிரஸ் தோற்றுவிட்டது என்று குற்றம்சாட்டினார்.
வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் முதல்வர் கன்ராட் சங்மா தலைமையில் தேசிய மக்கள் கட்சி பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் உள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சிக்கு 17 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். மேகாலயா காங்கிரஸ் தலைவராக சில மாதங்களுக்கு முன் வின்சென்ட் பாலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் கட்சித் தலைமை மீது மேகாலயா முன்னாள் முதல்வர் முகுல் சங்மா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
முகுல் சங்மா அப்போது கோல்கட்டாவில் தேர்தல் வியூக நிபுணரும், திரிணமுல் கட்சிக்காக பணியாற்றி வருபவருமான பிரசாந்த் கிஷோரை சந்தித்துச் சென்றார். இந்நிலையில். தான் உட்பட 12 எம்.எல்.ஏ.,க்களுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டார். பிரசாந்த் கிஷோரின் குழு 2023 மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் திரிணமுல் காங்கிரஸை ஆட்சியில் அமர்த்த பணியாற்றி வருகிறது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் இம்மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே கோவாவிலும் காங்கிரஸ் கட்சியை காலி செய்தது திரிணாமுல்.
‛தான் இம்முடிவு எடுக்க காங்கிரஸ் கட்சியே காரணம்' என முன்னாள் முதல்வர் முகுல் சங்மா புகார் தெரிவித்துள்ளார். “திறமையான எதிர்க்கட்சியாக செயல்படுவதில் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது. 2018ல் தனிபெரும் கட்சியாக இருந்த போதும் ஆட்சி அமைக்க முடியவில்லை. அதற்கான காரணம் அனைவரும் அறிந்ததே. மக்களுக்கும், தேசத்துக்கும் எப்படி சிறந்த சேவை செய்ய முடியும்? என நீண்ட ஆய்விற்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு இது,” என கூறினார்.

பாம்புக்கு பயந்து புலி கிட்டே சிக்குறியே ஐயா