dinamalar telegram
Advertisement

வடகிழக்கு மாநிலங்களில் முதலீட்டை அதிகரிக்க அமித் ஷா வலியுறுத்தல்

Share
புதுடில்லி: ‛‛வடகிழக்கு மாநிலங்களில் முதலீட்டை அதிகரிக்க பெரு நிறுவனங்கள் அப்பகுதியில் தொழிற்சாலைகளின் முதலீடு செய்யவேண்டும்,'' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

இந்திய வர்த்தக சேம்பர் நடத்திய ‛பாரத் அட் 75 எம்பவரிங் நார்த் ஈஸ்ட் இந்தியா' என்ற விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு இந்திய வர்த்தகத்தை பெருக்க மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: மணிப்பூர், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து மேற்குவங்கம், அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட பல வடகிழக்கு மாநிலங்களில் பெரு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் துவங்க முதலீடு செய்யவேண்டும். சமீப காலத்தில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் முன்னேற்றம் அதிகரித்து வருகிறது.

சர்வதேச பொருளாதார சேம்பர் (ஐ.சி.சி.,) இடம் இதுகுறித்து கேட்டுக்கொண்ட அவர் கடந்த 7 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் அதிக அளவு முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் முதலீட்டுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளன.

இந்தியாவை 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் ஆண்டு வருமானம் கொண்ட நாடாக மாற்றுவதை மத்திய பாஜ., அரசு இலக்காக வைத்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் முதலீட்டை அதிகரித்தாலே ஒழிய இந்த இலக்கை எட்ட முடியாது.

கடந்த 2014ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி வடகிழக்கு மாகாணங்களுக்கு ஐம்பதுக்கு ஐம்பது முறைக்கு மேல் வருகை தந்து இருப்பார். மத்திய பாஜ., அரசு வடகிழக்கு மாநிலங்களில் ஆட்சி அமைத்ததை அடுத்து இந்தியாவில் அப்பகுதியை வடகிழக்குப் பகுதியை முன்னேற்ற மத்திய பாஜ., அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • Milirvan - AKL,நியூ சிலாந்து

    தமிழ் நாட்டு ஜல்லி கட்டுக்கு பல வருஷமா அல்வா குடுத்து வாய சப்பு கொட்ட வச்சது கான்கிராஸும் அதன் தோழர்களும். அந்த அல்வாவ தூக்கி கடாசிட்டு தமிழ்நாட்டு பாரம்பரியத்தை மீட்டு கொடுத்தது பிஜேபிதான். உங்க பாஷயில சூடான பக்கோடாவ சாப்புட குடுத்தாங்க.. விஷம ஊடகங்கள் மறைச்சாலும் பெரும்பாலான மக்களுக்கு தெரியும் அப்புசா..பாயாசம் காச்சுறது சாராயம் காச்சுறதுல எல்லாம் யாரு யுனெஸ்கோ விருது வாங்கி இருக்கிறா'ன்னு தெரியும்.. காமால கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாம், அப்புசா..

  • அப்புசாமி -

    ஏன் பேச்சோட நிறுத்திட்டீங்க? சும்மா போய் அஸ்ஸாமுக்கு ஒரு எய்ம்ஸ், மேகாலயாவுக்கு மெட்ரோ, நாகாலாந்துக்கு ஒரு டிஃபன்ஸ் காரிடார்னு அடிக்கல் நாட்டிற வேண்டியதுதானே... ஒரு ஒரு லட்சம் கோடிக்கு பில் போடுங்க. நாலு நாலு செங்கல்லோட சோலிய முடிச்சுருங்க.தமிழ்நாட்டுக்கே அல்வா குடுக்குறீங்க. அவிங்களுக்கு பாயாசமே குடுக்கலாம்.

Advertisement