ADVERTISEMENT
சென்னை: நெல்லை, தூத்துக்குடியில் பலத்த மழை பெய்தது. திருச்செந்தூர் கோயிலில் வெள்ளம் புகுந்தது. நெல்லையில் 4.7 செ.மீ., மழையும், பாளையங்கோட்டையில் 3 செ.மீ., மழையும், பாபநாசத்தில் 2.7 செ.மீ., ராதாபுரம் 4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில், இன்று (நவ.,25) பிற்பகலில் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.
திருநெல்வேலி, புதுக்கோட்டை, விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ததால், சாலையில் தண்ணீர் தேங்கியது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையால் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இப்ப மதுரையிலும் பெரு மழை கொட்டிக் கொண்டிருக்கிறது.