மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் கடுமையாக போராட்டங்கள் நடத்தினர். தற்போது மத்திய அரசு அச்சட்டங்களை ரத்து செய்துள்ளது. போராட்டம் நடத்திய சீக்கியர்களை காலிஸ்தான் பயங்கரவாதிகள் என ஆரம்பம் முதலே விமர்சித்து வருகிறார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். மேலும் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவையும் கடுமையாக விமர்சித்தார். சாலையில் தான் சட்டங்கள் இயற்றப்படுகின்றனவா? என்று கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், கடந்த நவ., 20 அன்று தனது சமூக வலைத்தளத்தில் சீக்கியர்களை விமர்சித்து பதிவொன்றை இட்டிருந்தார். அதில் “காலிஸ்தானி பயங்கரவாதிகள் இன்று அரசாங்கத்தை வளைக்கலாம். நாம் ஒரு பெண்மணியை மறந்து விடக் கூடாது. அவர்களை தனது காலணியால் நசுக்கிய ஒரே பெண் பிரதமர். அவர் இந்த தேசத்திற்கு எவ்வளவு துன்பம் தந்திருந்தாலும் பரவாயில்லை. தன் உயிரையே விலையாகக் கொடுத்து அவர்களை கொசுக்களைப் போன்று நசுக்கினார். தேசத்தை பிளவுபடுத்த விடவில்லை,” என கூறியிருந்தார்.
சீக்கியர்களை பயங்கரவாதிகளாக கங்கனா சித்தரிப்பதாக இதற்கு அச்சமூகத்தினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கங்கனா மீது மும்பை தொழிலதிபர், டில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுத் தலைவர்கள், ஷிரோன்மனி அகாலி தள கட்சி சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆம் ஆத்மியின் ராகவ் சத்தாவை தலைவராக கொண்ட டில்லி சட்டசபையின் அமைதி மற்றும் நல்லிணக்க குழு, ‛‛சர்ச்சை கருத்து தொடர்பாக டிச., 6 அன்று கங்கனா ரனாவத்தை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்,'' என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த பெண் பேச்சுகளில் சந்தேகம் வருகிறது. காங்கிரசை முற்றிலும் துடைத்தெறிய கங்கணம் கட்டிக்கொண்டு, யாரோ, எந்த கட்சியோ இந்த பெண்ணை இப்படி வில்லங்கமாக பேச வைப்பதுபோல தெரிகிறது. பல சர்ச்சை பேச்சுகள்.