dinamalar telegram
Advertisement

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொட்டப்போகுது மிக கனமழை

Share
சென்னை: ‛‛தமிழகத்தில் ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் இன்று (நவ.,25) மிக கனமழை பெய்யும்,'' என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:



தெற்கு வங்க கடற்பகுதியில் (3.1 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போதுள்ள சூழ்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை. இந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக.

இன்று (நவ.,25ம் தேதி): ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமுதல் மிக கனமழையும், கடலுார், அரியலுார், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை 26ம் தேதி: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம், சேலம், நீலகிரி, கோவை, ஈரோடு டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

வரும் 27 ம் தேதி: காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்.
வரும் 28 ம் தேதி: திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்.

வரும் 29ம் தேதி: தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை:



அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு:



ராமேஸ்வரம் (ராமநாதபுரம்) 8 செ.மீ., திருப்பூண்டி, திருக்குவளை (நாகை) தலா 5 செ.மீ., பண்ருட்டி (கடலுார்), திருவாரூர் தலா 4 செ.மீ., பள்ளிக்கரணை (சென்னை), தலைஞாயிறு, கோடியக்கரை (நாகை), பாம்பன், தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), வானமாதேவி (கடலுார்), சத்யபாமா பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), மதுக்கூர் (தஞ்சாவூர்) தலா 3 செ.மீ.,

மீனவர்களுக்கான எச்சரிக்கை:



வங்கக்கடல் பகுதிகள்:



இன்று 25 மற்றும் நாளை 26ம் தேதி: குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
வரும் 27 ம் தேதி: குமரிக்கடல், மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

வரும் 29ம் தேதி: தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

    கோடை காலத்தில் குடி நீர் பஞ்சம் வராமல் இருந்தால் சரி.

  • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

    தமிழகத்தில் பெய்யும் மிகுந்த மழையினால் வருண பகவானுக்கு கோபமா அல்லது மிகுந்த கருணையா என்பது விளங்காத புதிராக இருக்கிறது.

  • Karuppiah - ????????,இந்தியா

    தெய்வமே அடிக்கடி நியூஸ் போடுங்க, இடி காத போலகுது , மின்னல் கண்ண பறிக்குது மழையோ சோன்னு பெய்யுது இன்னும் எவ்ளோ நாளைக்கு இந்த மாதிரியே இருக்கும்

Advertisement