dinamalar telegram
Advertisement

சிங்கப்பூர், மலேஷியாவுடன் விமான போக்குவரத்து ஒப்பந்தம்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

Share
சென்னை: சிங்கப்பூர், மலேஷியாவிற்கு கோவிட் கால விமான போக்குவரத்திற்கான ஒப்பந்தத்தை செய்ய வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன், கோவிட் கால விமான போக்குவரத்திற்கான ஒப்பந்தம் செய்யவில்லை. இதனால், அந்நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள், தமிழகத்திற்கு வர விரும்பும் நேரங்களில், நேரடி விமான சேவையில்லை. இதனால், துபாய், தோகா மற்றும் கொழும்பு மார்க்கமாக மாற்றுப்பாதையில் பயணம் மேற்கொள்ள வேண்டி உள்ளதால், பல்வேறு பிரச்னைகளுடன், அதிக விமானக்கட்டணங்களை செலுத்த வேண்டி உள்ளது.
அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு தற்காலிக விமான சேவைகளை வழங்க, சிங்கப்பூர் மற்றும் மலேஷியா நாடுகளுடன் இடையே, தற்காலிக கோவிட் கால விமான போக்குவரத்து ஏற்பாடுகள் ஒப்பந்தத்தை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (42)

 • Bairav Kumar - Chennai,இந்தியா

  மக்கள் நலனில் அக்கறை இருப்பது போல் தெரியவில்லையே. இப்பவெல்லாம் கருப்பு பணத்தை பதுக்க ஸ்விஸ்சர்லாண்ட் போக தேவையில்லை. 3 நேர விமானப்பயண தூரத்துல இருக்கற சிங்கப்பூர்தான் கருப்பு பண ஹப். சென்னை லே இப்ப அதுக்கு ஏஜென்ட் இருக்காங்க. எங்கிட்டே இத்தனை கோடி ருபாய் இந்த இடத்துல கருப்பு பணம் இருக்குனு சொன்ன போதும் ஏஜென்ட் வந்து அத எடுத்து செட்டில் பண்ணி அரசியல் கட்சி மற்றும் பிரிவினைவாதிகளுக்கு சிங்கப்பூர் பேங்க் அக்கௌன்ட் நம்பர் குடுத்துடுவாங்க. ஆனா மோடி ஆட்சி வந்தபிறகு இந்த ஆட்டம் குறைஞ்சிடுச்சி. எனக்கு என்னமோ இந்த ஆள் சிங்கப்பூருக்கு விமானம் விட சொல்றத பாத்த அங்கே ஏற்கனவே பதுக்கி வெச்சிருக்கிற கருப்பு பணம் வட்டியை எடுத்து சிங்கப்பூர்ல தாய் மசாஜ் செஞ்சிட்டு வரலாமுன்னு பிளான் பண்றார் போல. ஏற்கனவே ஐபோன் 13 ரிலீஸ் பண்ணப்ப உலக அளவில் செல்வாக்கான திமுக குடும்ப ஆன் வாரி உதய் க்கும், கனி க்கும் சிங்கப்பூரில் ருக்கும் இந்திய தூதரக செல்வாக்கில் அங்கு வேலை பார்க்கும் ஒரு அதிகாரி மூலம் நான்கு புதிய மாடல் ஐபோன் சென்னை வரும் ஏர் இந்தியா விமானத்தில் கொடுக்க பட்டு கோபாலபுரம் பிரிவினைவாத குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டது என மத்திய உளவு துறை உள்துறைக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. திராவிட குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்கும் சிங்கப்பூர் இந்திய தூதரக அதிகாரிகள் மாற்றப்படலாம்.

 • ravi - chennai,இந்தியா

  ஜூனியர் கலைஞர் ஆட்சியில் தேனும் பாலும் வழிந்தோடுகிறதாமே-ரௌடிகளால் ரத்த ஆறு ஒரு புறமும் தக்காளி வாங்கப்போனவர் தக்காளி சட்னி ஆக்கப்பட்டது இன்னொரு புறமும்-ஒரே சுபீட்சம் தான் எல்லாப்பக்கமும், இதில் விமானபோக்குவரத்துதான் குறை.

 • Truth Triumph - Coimbatore,இந்தியா

  ஏம்ப்பா மழை டூர் முடிச்சு இப்பதான் வெள்ளை வேட்டி சட்டை போட்டு ஒரு கடிதம் எழுதினேன் அது தப்பா?

 • Sathya -

  What joker this Chief Minister is. Why did people of TN elect such a

 • sankar - Nellai,இந்தியா

  இதெல்லாம் - மத்திய அரசு சம்பத்தப்பட்ட விஷயம் - என்பதை யாராவது சொல்லுங்கப்பா

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

   சிங்கப்பூர், மலேஷியாவிற்கு கோவிட் கால விமான போக்குவரத்திற்கான ஒப்பந்தத்தை செய்ய வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.....மத்திய அரசு சம்பந்தப்பட்டதால் கடிதம் எழுதியிருக்கிறார்.

Advertisement