dinamalar telegram
Advertisement

கோவிட்; சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1.09 லட்சமாக குறைந்தது

Share
புதுடில்லி: இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 1.09 லட்சமாக குறைந்தது. கடந்த 539 நாளில் இதுவே மிகக்குறைவாகும்.

இந்தியாவில் நேற்றைய (நவ.,24) கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.33 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.35 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.32 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தடுப்பூசி



இந்தியாவில் இன்று (நவம்பர் 25) காலை 8 மணி நிலவரப்படி 119.38 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 90,27,638 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement