dinamalar telegram
Advertisement

டவருக்கு பேட்டரி மாற்ற காசில்லை: பரிதாப நிலையில் பி.எஸ்.என்.எல்.,

Share
தஞ்சாவூர்: 'மொபைல் போன் டவருக்கு பேட்டரி மாற்றக் கூட நிதியில்லை' என பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த ஒருவர், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் அதிகாரி ஒருவருக்கு போன் செய்துள்ளார். அப்போது, 'கரன்ட் நின்ற அடுத்த நிமிஷமே, மொபைல் டவர் ஆப் ஆகி விடுகிறது. சிக்னல் மீண்டும் வர பல மணி நேரம் ஆகிறது. இரண்டு ஆண்டுகளாக இந்த பிரச்னை தொடர்கிறது. இது தொடர்பாக பல முறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை' எனக் கூறியுள்ளார்.தஞ்சாவூர் மட்டுமின்றி, பல மாவட்டங்களிலும் இந்த புகார்கள் உள்ளன.

இது குறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:தஞ்சாவூர் மாவட்டத்தில் 330 டவர்கள் உள்ளன. அதில் பேட்டரி பேக்கப், ஜெனரேட்டர் அமைத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது பல பேட்டரிகள் பழுதடைந்து, புதிய பேட்டரி மாற்ற வேண்டிய நிலையில் உள்ளன.ஜெனரேட்டரும் பழுதுடைந்துள்ளது. 'மேனுவல்' முறையில் இயங்கக் கூடிய ஜெனரேட்டரை, ஆப்பரேட் செய்யக்கூடிய ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால், அவர்களும் வருவது இல்லை.
ஜெனரேட்டருக்கு டீசல் வாங்க முடியாத அளவிற்கு நிதி நெருக்கடி உள்ளது.தனியார் இடங்களில் டவர்களுக்கு 10 மாதங்களாக வாடகை வழங்காத நிலையில், உரிமையாளர்கள் நெருக்கடி வேறு உள்ளது.புதிய பேட்டரி மற்றும் ஆட்டோமேட்டிக் ஜெனரேட்டர் அமைக்க தேவையான நிதியை ஒதுக்குமாறு, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சருக்கு பல முறை கடிதம் அனுப்பியும் பலன் இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (60)

 • NKR rekha - Karur,இந்தியா

  ஆனா சிலை செய்ய 3000 கோடி நிதி ஒதுக்க முடியும்

 • தேவதாஸ், புனே -

  இதுக்கும் மோடிதான்.... காரணமுன்னு சொல்லுங்க...... ஏன்னா பாவம்.... மாறனுக்கு ஒன்னும் தெரியாது.....

 • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

  அரசின் ரெட் டேப் அதாவது சிகப்பு நாடா என்ற அங்கு முறையில் அதுவும் கொரோனா காலத்தில் துரித காலத்தில் செயல்பட முடியாத அவ நிலை

 • elakkumanan - Naifaru,மாலத்தீவு

  திருடி தின்னதுனால வந்த நிலை......திருடியனும் எஸ்கேப்...தின்னவனும் எஸ்கிப்..............தவறை கண்டும் காணாமல் இருந்த (தவறுக்கு மறைமுக உடந்தை கோஷ்டி ) கும்பல் , இன்று சம்பளம் பெறமுடியாத மோசமான கட்டத்தை எதிர்கொள்கிறார்கள்..................ராசா , கேடி எல்லாரும் இப்போ வந்து தள்ளுவாங்க...............

 • Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா

  இரண்டு ஆண்டுகளுக்கு முன் தஞ்சையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு புதிய இணைப்பு பெற சென்றிருந்தேன். அலுவலகத்தில் யாரும் இல்லை. எல்லோரும் சாலையில் உண்டியல் கட்சிகளுடன் நின்றுகொண்டு ஏதேதோ உளறிக்கொண்டிருந்தனர். இதே காட்சியை நான் தஞ்சையில் இருந்த காலங்களில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். அப்படியே அலுவலகத்தில் ஆட்கள் இருந்தாலும் தங்கள் நிர்வாகத்தையும், மத்திய அரசையும் திட்டிக்கொண்டேதான் இருப்பார்கள். ஒருவழியாக இணைப்பு கொடுக்க வந்த ஊழியருக்கு 50 வயதுக்கு மேல் இருக்கும். அவரால் போஸ்டில் ஏற முடியவில்லை. ஏணியும் இல்லை. அங்கும் வந்து நிர்வாகத்தை குறைகூறிக்கொண்டிருந்தார். அப்புறம் நானே அருகில் இருந்த சுவற்றில் ஏறி வயரை இழுத்து இணைப்பு கொடுத்தேன். ஒன்றுமே செய்யாத, இயலாத, தெரியாத ஒரு உண்டியல் கூட்டம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை அழித்துவிட்டது. இப்போது பெரும்பாலான டிக்கெட்டுகள் வி.ஆர்.எஸ். வாங்கிக்கொண்டு, மத்திய அரசை இன்னமும் விமர்சித்துக்கொண்டு, சுகமாக வாழ்கிறார்கள். மீதம் இருக்கும் வேலையில்லா ஊழியர்களும் விரைவில் வீட்டுக்கு - நல்லது நாட்டுக்கு.

Advertisement