dinamalar telegram
Advertisement

தலைக்கு 2 கிலோ மட்டுமே தக்காளி! பத்திரிகை காண்பித்தால் திருமணத்திற்கு மொத்த ‛சப்ளை

Share
பெ.நா.பாளையம்: கோவை உழவர் சந்தையில் நபர் ஒருவருக்கு, 2 கிலோ தக்காளி மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என, வியாபாரிகளுக்கு வேளாண் வணிக அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

கோவையில் தக்காளி சீராக பொதுமக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையிலும், பதுக்கலை தடுக்கவும், தோட்டக் கலை துறையினர், கடந்த இரண்டு நாட்களாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை துணை வேளாண் இயக்குனர் (வேளாண் வணிகம்) சுந்தரவடிவேலு கூறியதாவது: மழையால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கள ஆய்வுக்கு சென்றபோது, நேரில் பார்த்தோம்.
தக்காளி தட்டுப்பாடு காரணமாக, நுகர்வோர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக உழவர் சந்தை உள்ளிட்ட காய்கறி அங்காடிகளில், நபர் ஒருவருக்கு இரண்டு கிலோ தக்காளி மட்டுமே வழங்க வேண்டும் என, அறிவுறுத்தி உள்ளோம். உழவர் சந்தையில் மொத்தமாக தக்காளியை யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது. திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு திருமண பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களை முறைப்படி சமர்ப்பித்தால் மட்டுமே அதிக அளவில் தக்காளி வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (13)

 • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

  Please don't repeat the same comment

 • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

  நுகர்வோர் யாரும் வாங்காமல் இருந்தால் பதுக்கி வைத்திருக்கும் ஃபிராடு வியாபாரி எல்லாம் தக்காளியை குப்பைல தான் கொட்டணும். kavikumaar Ram சொல்வது நல்ல யோசனை.தக்காளி ஒன்றும் அத்தியாவசியமான காய்கறி என்பது உண்மை.

 • Samathuvan - chennai,இந்தியா

  தக்காளிதான் பேஸ்ட் ஆகி ரொம்ப நாளாச்சு, இதுவும் திராவிட சதின்னு இந்த சங்கி கும்பல் கூவும். இதுக்கு மேல காரணம் கேட்கணும்னா நம்ம எப் எம் ட்டதான் கேட்கணும் அவங்க நல்ல விளக்கம் கொடுப்பாங்க இந்த வெங்காயத்திற்கும், பூண்டுக்கும் கொடுத்ததுபோல.

 • T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா

  திருட்டு திராவிட ஆட்சியில் இலவசங்களை வாங்கிய மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் விலை வீழ்ச்சி அடையும் அதை சேமித்து வைக்க குளிர்பதன கிடங்குகள் கட்டி இருந்தால் இதுபோன்ற அவல நிலை இல்லாமல் இருந்திருக்கும் காமராஜர் கட்டிய அணைக்கு பிறகு எந்த அணையும் தமிழகத்தில் கட்டப்படவில்லை .

 • சீனி - Bangalore,இந்தியா

  1 கிலோ தக்காளியோட வந்தால் தான் சாப்பாடு என்று அழைப்பிதழில் அறிவித்து விடலாம். கனமழை காரணமாக பல்லாயிரம் ஏக்கர் தக்காளி செடிகள் அழிந்துவிட்டன, பொங்கலுக்கு பிறகு தான் புது விளைச்சல் வர வாய்ப்பு உள்ளது, விலையும் குறையும். சாம்பார் ரசத்தில் தக்காளிக்கு பதில் தக்காளி ஜூஸ், தக்காளி கெட்சப் போட்டு சமைக்கமுடியுமா என்று இல்லதரசிகள் சோதனை பண்ணி பார்க்கவேண்டும், ஆனா கணவன்கள் தான் சோதனை எலி.... ஹாஹாஹா அதிகம் விளையும் போது தக்காளியை ஊறுகாய் அல்லது காயவைத்து மீண்டும் ஏதாவது முறையில் தக்காளியாக்க முடியுமா என்று உணவு தொழில்னுட்டம் கண்டறிய வேண்டும்.

Advertisement