பார்லி.,க்கு குழந்தையை அழைத்து வர தடை: எம்.பி.,க்கள் எதிர்ப்பு
லண்டன் : பிரிட்டன் பார்லி.,க்கு குழந்தைகளை அழைத்து வர விதித்த தடையை நீக்குமாறு, எம்.பி.,க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஐரோப்பாவைச் சேர்ந்த பிரிட்டனில், தொழிலாளர் கட்சி எம்.பி.,யான ஸ்டெல்லா கிரீசி என்பவர், பார்லி.,யில் நடந்த விவாதத்தின் போது, தன் மூன்று வயது குழந்தை பிப்பை தன்னுடன் அழைத்துச் சென்றார்.இதைத் தொடர்ந்து, எம்.பி.,க்கள் தங்கள் குழந்தைகளை பார்லி., கூட்டத்திற்கு அழைத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக, பார்லி., நிர்வாகம், ஸ்டெல்லா கிரீசிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இது குறித்து ஸ்டெல்லா கிரீஸ் கூறியதாவது:
பார்லி.,க்கு குழந்தையை அழைத்து வந்தால், அவையில் அமர அனுமதிக்க முடியாது என எனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நான் ஏற்கனவே என் பெண்ணை அழைத்து வந்துள்ளேன். தற்போதுகைக் குழந்தையை அழைத்து வந்தேன். தாய்மார்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்பதற்காகவே இது போன்ற தடைகள் விதிக்கப்படுவதாக கருதுகிறேன். பார்லி., நிர்வாகம் தடையை நீக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரிட்டன் துணை பிரதமர் டொமினிக் ராப் கூறும்போது, '' நவீன காலத்திற்கு ஏற்ப நம் பணிச் சூழல் மாற வேண்டும். பெற்றோர்கள் தங்கள் வேலைக்கிடையே தேவையான நேரத்தை குடும்பத்திற்கு ஒதுக்குவதில் தவறில்லை,'' என்றார்.
''பார்லி., கூட்டங்களில் கடைசி இருக்கையில் உள்ளோரின் கூச்சலை விட குழந்தைகளால் தொந்தரவு குறைவாகவே இருக்கும் என்பதால், தடையை நீக்க வேண்டும்'' என, பசுமைக் கட்சி எம்.பி., கரோலின் லுகாஸ் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே, தடை உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக, சபாநாயகர் லின்ட்சே ஹெய்லி தெரிவித்துள்ளார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!