dinamalar telegram
Advertisement

விவசாயியை போய்யா என திட்டிய அமைச்சர் மகேஷ்

Share
திருச்சி : திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே திருநெடுங்குளம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது விவசாயி ஒருவர், 'வெள்ள பாதிப்புகளை வயலில் இறங்கி பார்க்க வேண்டும்' எனக் கூற, ஆத்திரம் அடைந்த அமைச்சர் மகேஷ், போய்யா என திட்டினார். அதைக் கேட்ட விவசாயி, 'நானும் விவசாயி தான்' எனக் கூற, அமைச்சர், விவசாயியை பார்த்து முறைத்தார். விவசாயியை அமைச்சர் திட்டிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (91)

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    ஒரு வருஷம் அலையவிட்டு எழுநூறு உசுரை காவு வாங்கி, காரை ஏத்தி எட்டு பேரை கொன்ன மாதிரி பில்ட் அப் கொடுக்குறீங்களே.. போடான்னா சொன்னாரு? போ ஐயா ன்னு தான்னே சொன்னாரு ..

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    ஆமா கொஞ்ச நாள் பச்சை துண்டு போட்டுக்கினு நானும் விவசாயீ தான்னு கூவின வைகோ எங்கே ?தமிழகத்தில் வெல்ல நிவாரணத்தில் அவரோ அல்லது புதுமுகம் (?) துரை வைகோ வோ காணவே காணோம் ?டெல்லிலே சேவை (?) ?செய்றாங்களோ

  • Balaji - Chennai,இந்தியா

    அந்த ஏழை விவசாயியின் மனது எவ்வளவு வலித்ததோ... சமூக நீதிக்காவலர்கள் இதை கண்டிப்பார்களா?

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    வாய்யா வாய்யா -கமலின் பாட்டு நினைவுக்கு வருகிறது .

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    நம்நாட்டில் பிரதிநிதிகளைத் திரும்பப்பெறும் தீர்மானம், சட்ட மாற்றம் இல்லாதவரை அறைக் குடம் , குறை கூடங்களின் ஆட்டத்தை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும் அந்த விவசாயி வயலில் இறங்கித்தான் இவர் வயிற்றை நிரப்புகிறார்

Advertisement