அரைகுறை வடிகால் பணியால் அபாயம்
மாதவரம் மண்டலம், 30வது வார்டு, வி.ஆர்.டி., நகர், முதலாவது பிரதான சாலை - -மாதவரம் நெடுஞ்சாலை சந்திப்பில், மழை நீர் வடிகால் பணி அரைகுறையாக விடப்பட்டு உள்ளது.
அதற்காக வெட்டப்பட்ட பள்ளத்தால், அந்த பகுதிக்கான பொது தொலைபேசி பகிர்மான பெட்டி உறுதியிழந்து சரிந்துள்ளது. மேலும், அதன் அருகில் உள்ள மின் கம்பமும் உறுதியிழந்துள்ளது. வி.ஆர். டி., நகருக்கு செல்வோர் மற்றும் அங்குள்ள மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு செல்வோர் பலரும், அந்த சந்திப்பை கடந்து தான் சென்று வர வேண்டும். இரவு நேரத்தில், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. அதனால், அரைகுறையாக நிறுத்தப்பட்டுள்ள மழை நீர் வடிகால் பணியை, விரைந்து முடிக்க வேண்டுமென, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!