2 டன் ரேஷன் அரிசி பல்லாவரத்தில் பறிமுதல்
பல்லாவரம் : பல்லாவரம், பழைய டிரங்க் சாலை வழியாக, நேற்று முன்தினம் லோடு ஆட்டோ ஒன்று சென்றது. அந்த ஆட்டோவில் இருந்து, ரேஷன் அரிசி கொட்டியது.
இதை பார்த்து சந்தேகமடைந்த பல்லாவரம் ரோந்து போலீசார், அந்த வாகனத்தை மடக்கி சோதனை நடத்தினர். அப்போது, ஆலந்துாரில் உள்ள ஒரு ரேஷன் கடையில் இருந்து, 40 மூட்டை அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது. அரிசி கடத்தலில் ஈடுபட்ட ரேஷன் கடையின் தற்காலிக ஊழியரான, குரோம்பேட்டையைச் சேர்ந்த அருண்குமார், 37 மற்றும் ராஜலிங்கம், 31, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!