dinamalar telegram
Advertisement

மீண்டும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், புழலில் நீர் திறப்பு

Share
Tamil News
மணலிபுதுநகர் ; கொசஸ்தலை ஆற்றில் திறக்கும் உபரி நீர் அளவு குறைந்த நிலையில், மீண்டும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், புழலில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


இதனால், வடசென்னை மக்கள் பீதி அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பே, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும், பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் போதுமான அளவு நீர் இருந்தது.நிலைமைபருவமழை துவங்கிய பின், முதல் அதி கனமழையால், பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து, அதிகபட்சமாக, வினாடிக்கு, 15 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. எனினும், கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

அதே நேரம், புழல் ஏரி நிரம்பி, அதிகபட்சமாக, வினாடிக்கு, 3,000 கனஅடி வரை உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால், ஆமுல்லைவாயில் தரைப்பாலம், ஐ.ஓ.டி., நிறுவனம் செல்லும் இரு தரைப்பாலங்கள், மணலி விரைவு சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை, சடையங்குப்பம் மேம்பால வழி, பர்மா நகர் இரும்பு பாலம் வழி உள்ளிட்ட பல முக்கிய சாலைகள் வெள்ளநீரில் மூழ்கின. சில தினங்களுக்கு பின், நிலைமை சீரானது.பின்னோக்கிஅதன் பின் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் எதிர்பார்த்த அளவு பெரிய மழை பெய்யாததால், வடசென்னை மக்கள் நிம்மதி அடைந்தனர். அதே சமயம், ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழையால், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து மளமளவென உயர்ந்தது. அதன்படி, அதிகபட்சமாக, வினாடிக்கு, 38 ஆயிரம் கன அடி வரை, உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது. இதில், மணலிபுதுநகரின் பல பகுதிகள் வெள்ளநீரில் சிக்கியது. கொசஸ்தலை ஆற்றிலிருந்து, புழல் உபரி கால்வாயில் பின்னோக்கி ஏறிய உபரி நீர், சடையங்குப்பம் - பர்மா நகரை, தீவாக்கியது. தற்போது, பூண்டிக்கு, நீர் வரத்து குறைவதால், நீர் திறப்பும் குறைக்கப்படுகிறது. இதனால், அனைத்து பகுதிகளிலும், வெள்ளநீர் வடிந்து, நிலைமை சீரடைந்து வருகிறது.நீர்மட்டம்இந்நிலையில், வங்க கடலில் உருவாகியுள்ள காற்றதழுத்த தாழ்வு பகுதியால், மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புழலில் இருந்து,

நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 1,698 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது.இதனால், மணலி - ஆமுல்லைவாயில் தரைப்பாலம், தொடர்ந்து வெள்ளநீர் மூழ்கி கிடக்கிறது. உபரி கால்வாயில் நீர் வரத்து அதிகரிப்பால், மாற்று பாதையான, சி.பி.சி.எல்., சுற்றுசுவர் வழியாகவும், உபரி நீர் ஏறி வழிய துவங்கியுள்ளது.பூண்டியில் நீர் திறப்பு, 9,000 கனடி என்ற அளவில் உள்ளது.


கன அடி அதிகம் என்றாலும், முன்பை காட்டிலும், நீர் மட்டம் மற்றும் வேகம் வெகுவாக குறைந்துள்ளது.எதிர்வரும் மழையின் போது, ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தால், நீர்திறப்பும் அதிகம் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வடசென்னை குடியிருப்புகள் மீண்டும் வெள்ளத்தில் மிதக்குமோ என அப்பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement