ஆப்கனில் கால் பதிக்க சீன நிறுவனங்கள் ஆர்வம்
பீஜிங்:ஆப்கனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அங்குள்ள கனிம வளங்களை பயன்படுத்தி தொழில் துவங்க சீன நிறுவனங்களிடம் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
தெற்காசிய நாடான ஆப்கனில், மக்களாட்சி அகற்றப்பட்டு பழமைவாத கொள்கைகளை பின்பற்றும் தலிபான் ஆட்சி அமைந்துள்ளது. பாக்.,ஐ தொடர்ந்து தலிபான் அரசுக்கு சீனாவும் ஆதரவளித்து வருகிறது. ஆப்கனில் சீனா, பாக்., ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளின் துாதரகங்கள் இன்னும் செயல்பட்டு வருகின்றன.
கடந்த வாரம் சீனா, ஆப்கன் மக்களுக்கு ஆயிரம் டன் உணவுப் பொருட்களை வழங்கியது. அத்துடன், 230 கோடி ரூபாய் நிதியுதவியை அறிவித்துள்ளது.அரசியல் ரீதியில் ஆப்கனை உலக நாடுகள் அங்கீகரிக்க தேவையான முயற்சிகளையும் சீனா எடுத்து வருகிறது.
இந்த நடவடிக்கைகளை, சீன நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளன. சமீபத்தில் சீன அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த, 20 நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஆப்கன் வந்து 'லித்தியம்' தாமிரம் சார்ந்த தொழில்களை துவங்குவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.ஆப்கனில் 75 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய லித்தியம், தாமிரம் உள்ளிட்ட கனிம வளங்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!