dinamalar telegram
Advertisement

முல்லை பெரியாறு அணையில் கனமழை நீர் வரத்து 8884 கனஅடியாக அதிகரிப்பு: கேரளாவுக்கு 3949 கன அடி வெளியேற்றம்

Share
Tamil News
கூடலுார்:பெரியாறு அணை நீர்பிடிப்பில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் அணைக்கு நீர்வரத்து 8884 கனஅடியாக அதிகரித்தது. இதனால் 7 ஷட்டர்கள் திறக்கப்பட்டு கேரளப் பகுதிக்கு வினாடிக்கு 3949 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
நீர்பிடிப்பு பகுதியான தேக்கடியில் 35.8 மி.மீ., பெரியாறில் 19.4 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு நீர்வரத்து 8884 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டம் 141.35 அடியிலிருந்து 141.65 ஆக உயர்ந்தது (மொத்த உயரம் 152 அடி).இதனால் அணையை ஒட்டியுள்ள 7 ஷட்டர்கள் திறக்கப்பட்டு கேரளப் பகுதிக்கு 3949 கனஅடி நீர் வெளியேற்றப் பட்டது. தமிழகப் பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 2300 கன அடி திறந்துவிடப்பட்டது.

மழை குறைந்தது



நேற்று முன்தினம் இரவு பெய்த மழை நேற்று காலையில் சற்று குறைந்தது. இதனால் காலை 7:00 மணிக்கு 2 ஷட்டர்கள் அடைக்கப்பட்டு 5 ஷட்டர்கள் மூலம் கேரள பகுதிக்கு 1915 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நேற்று பகல் 12:00 மணிக்கு நீர்வரத்து 2002 கன அடியாக குறைந்ததால் மேலும் 4 ஷட்டர்கள் அடைக்கப்பட்டு ஒரு ஷட்டர் மூலம் கேரளப் பகுதிக்கு 136 கனஅடி நீர் மட்டும் வெளியேற்றப்பட்டது. இவ்வாறு அணைக்கு நீர்வரத்துக்கு ஏற்ப ஷட்டர்களை திறப்பதும் அடைப்பதுமாக இருந்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement