dinamalar telegram
Advertisement

முடியாட்சிக்கு முடிவு கட்ட பா.ஜ.,வால் தான் முடியும்: மாநில செயற்குழுவில் தேசிய தலைவர் நட்டா பேச்சு

Share
Tamil News
திருப்பூர்: ''காஷ்மீர் முதல் தமிழகம் வரை நாடு முழுவதும் நிலவும் வாரிசு அரசியலுக்கு முடிவு காண பா.ஜ.,வால் மட்டுமே முடியும்,'' என, அதன் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார்.


தமிழக பா.ஜ., மாநில செயற்குழு கூட்டம் திருப்பூரில் நேற்று நடந்தது.
இதில், அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:தமிழகம் சிறந்த பண்பாடும், கலாசாரமும், வரலாற்று சிறப்பும் கொண்ட மாநிலம். சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது. வ.உ.சிதம்பரனார், தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன் போன்ற சுதந்திர போராட்ட தியாகிகள் வாழ்ந்த புண்ணிய பூமி. ஆன்மிகமும், விவசாயமும் செழித்த மண் இது.
தமிழ் மொழியின் சிறப்பு உலகம் அறிந்தது.திருவள்ளுவரை உலகுக்கு அளித்த சிறப்பு வாய்ந்தது தமிழகம். அவர் தந்த திருக்குறளை உலக அரங்கில் கொண்டு சென்றவர் பிரதமர் மோடி.

தமிழ் மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றையும் தமிழக மக்களையும் காப்பாற்றும் பொறுப்பு பா.ஜ.,வுக்கு உள்ளது. அதைச் சிறப்பாக செய்து வருகிறோம். தமிழகத்தின் வளர்ச்சியில் மக்கள் நலனில் அக்கறை கொண்டவராக பிரதமர் மோடி செயல்படுகிறார்.மத்திய அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அளித்து வருகிறது. தமிழகத்தில் இந்த திட்டங்கள் மூலம் பல லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். உலக அரங்கில் கொரோனாவுக்கு தடுப்பூசி உற்பத்தி செய்தும், மக்களுக்கு வழங்கியும் மத்திய அரசு உலக அளவில் புகழ் பெற்றது.காஷ்மீர் முதல் தமிழகம் வரை பல மாநிலங்களில் வாரிசு அரசியல், ஒரு குடும்பத்தின் ஆட்சி என உள்ளது. பா.ஜ., மட்டுமே இதற்கு முடிவு கட்டும், தீர்வு காணும் ஒரே கட்சியாக உள்ளது.


தி.மு.க., என்றாலே ஊழல்; குடும்ப அரசியல் என்ற நிலை தான் உள்ளது. அதன் செயல்பாடுகள் தேசத்துக்கே சவால் விடும் வகையில் உள்ளது. காங்., கட்சியும் குடும்ப கட்சியாக உள்ளது.கொரோனா காலத்தில் தி.மு.க., எங்கு இருந்தது என தெரியவில்லை. பா.ஜ., வினர் தான் மக்கள் தேவை அறிந்து பணியாற்றினர். மழை வெள்ள பாதிப்பின்போதும் பா.ஜ., களம் இறங்கி பணியாற்றியது.தமிழகத்தின் கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் தி.மு.க., செயல்படுகிறது. இதை மீட்டெடுக்கும் வகையில் பா.ஜ., செயல்பட வேண்டும்.

தமிழக பா.ஜ., நிர்வாகிகள் களப் பணியாற்ற வேண்டும். விவசாயிகளை நேரில் சந்தித்து பிரச்னைகள், தேவைகள் குறித்து விபரம் சேகரிக்க வேண்டும். வேளாண் வளர்ச்சிக்குத் தேவையானவை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, நட்டா பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (10)

 • M.S.Jayagopal - Salem,இந்தியா

  முடியாட்சியும் குடும்ப ஆட்சியும் நம் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவே நாம் சுதந்திரம் பெரும் வரை இருந்துள்ளது.எனவே ஜனநாயகம் இங்கு வெற்றி பெற இன்னும் பல காலம் ஆகும்.

 • T.sthivinayagam - agartala,இந்தியா

  மாண்புமிகு நோட்டா அவர்களே நீங்கள் சொல்லும் வாரிசுகள் அரசியலுக்கு மட்டுமேவா அல்லது அரசு அலுவலகங்கள் மற்றும் ஆலயங்களும் பொருந்துமா.

 • அப்புசாமி -

  காங்கிரசிலும் ராஜாஜி, நேரு, சாஸ்திரி ந்னு வெவ்வேறே ஆளுங்க வந்தாங்க. தி.மு.க விலும் அண்ணாதுரை, கட்டுமரம் வேற வேற ஃபேமிலிங்க. கொஞ்ச நாள்ள் அனதும் ஃபேமிலி கம்பெனியா மாத்திட்டாங்க. பா.ஜ இப்பத்தானே வாஜ்பாயி, இப்ப மோடின்னு வந்திருக்கு. கூடிய சீக்கிரம் ஜோதியில் ஐக்கியமாயிடுவீங்க.

 • ஆரூர் ரங் -

  ஓங்கோல் 😎 முடியாட்சிக்கு முடிவுரை அவசியமே.

  • Dhurvesh - TAMILANADU

   உங்களுக்கு முடிவு கட்ட எங்களால் தான் முடியும் , தமிழ்மாத கீ ஜெ

 • RandharGuy - Kolkatta,இந்தியா

  முடியாட்சிக்கு முடிவு கட்ட பா.ஜ.,வால் தான் முடியும்: கட்டிட்டாங்க விவசாயிங்க ......மன்னிப்பு மண்டியிட வய்த்த விவசாயிகள் வாழ்க ........தீர்வு காணும் ஒரே ஓட்டு கட்சியாக பா.ஜ.,...உள்ளது.

Advertisement