dinamalar telegram
Advertisement

ரூ.35 ஆயிரம் கோடியில் முதலீடுகள்: 54 நிறுவனங்களுடன் அரசு ஒப்பந்தம்

Share
Tamil News
கோவை ;''தமிழகத்தில், 22 மாவட்டங்களில் 35 ஆயிரத்து 208 கோடி ரூபாய் முதலீட்டில், 76 ஆயிரத்து 795 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், 54 நிறுவனங்களுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.''இதன் வாயிலாக, நாம் ஒரு டிரில்லியன் டாலர் - 75 லட்சம் கோடி, பொருளாதாரம் என்ற லட்சிய இலக்கை அடைந்து, விரைவில் உச்சநிலை எட்டுவோம்,'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

பல்வேறு சவால்கோவை கொடிசியா தொழில் கண்காட்சி அரங்கில் 'முதலீட்டாளர் முதல் முகவரி - தமிழ்நாடு' என்ற பெயரில், முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின், நேற்று முன்தினம் துவக்கி வைத்து பேசியதாவது:தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது முதல், தற்போது வரை, பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறோம். கொரோனா, மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களை, துல்லியமான நடவடிக்கைகளால் ஓரளவு வெற்றி பெற முடிந்தது.மக்களை காப்பது தான் அரசின் மகத்தான பணி. அதில், இந்த அரசு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.ஒவ்வொரு துறைக்கும் தேவையான திட்டங்களை தீட்டி, அதற்காக பல செயல் வடிவங்கள், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அதன் ஒரு பகுதி தான் இந்நிகழ்ச்சி. கடந்த ஆறு மாதங்களில் இது மூன்றாவது தொழில் மாநாடு.

உச்சநிலைஜூலையில் தொழில் மாநாடு, செப்டம்பரில் ஏற்றுமதியாளர் மாநாடு, நவம்பரில் முதலீட்டாளர் மாநாடு என்று மூன்று மாநாடுகளை நடத்தி விட்டோம்.
இதே வேகத்தில் போனால், நாட்டில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கும்.இந்தியாவின் முதன்மை முதல்வராக என்னை அறிவித்துள்ளனர். இது எனக்கோ, அமைச்சர்களுக்கோ, அரசுக்கோ கிடைத்த பெருமை அல்ல. தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் கிடைத்த பெருமையாக கருதுகிறேன்.தமிழகத்தில், 22 மாவட்டங்களில் 35 ஆயிரத்து 208 கோடி ரூபாய் முதலீட்டில், 76 ஆயிரத்து 795 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் 54 நிறுவனங்களுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.மத்திய அரசு, மாநிலங்களுக்கான தரவரிசையில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக அறிவித்துள்ளது. இது நமக்கு பெருமை. இதன் வாயிலாக நாம் ஒரு டிரில்லியன் டாலர் - 75 லட்சம் கோடி பொருளாதாரம் என்ற லட்சிய இலக்கை அடைவது, வெகு தொலைவில் இல்லை. விரைவில் உச்சநிலையை எட்டுவோம்.

தமிழகத்தின் இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களில் 'நியோ டைடல் பார்க்குகள்' அமைக்கப்படும். வார்ப்புத் தொழிலில், கோவை முன்னிலை வகித்து வரும் நிலையில் இங்கு 'சென்ட்டர் ஆப் எக்செலன்ஸ்' அமைக்கப்படும்.

தொழில் பூங்காதொழில் துறையின் முக்கிய துாண் என்றால், அது கோவை. மோட்டார் பம்ப், நெசவாலைகள், பின்னலாடைகள், கோழிப்பண்ணை, தென்னை வளர்ப்பு, வேளாண்மை, சிறுதொழில், குறுந்தொழில் என கோவையில் தொடாத, தொடராத தொழில்களே இல்லை.இப்படிப்பட்ட கோவையில் வான்வெளி பாதுகாப்புத் துறை தொடர்பான உற்பத்தியில் கவனம் செலுத்துவது அவசியம். அதற்காக, கோவை ஒரு முனையமாக உருவாக்கப்பட்டுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு முதலீடுகள் மற்றும் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வகையில் இத்துறை வலுப்பெறும்.எல் அண்ட் டி, எல்.எம்.டபிள்யூ., மற்றும் டி.வி.எஸ்., நிறுவனங்கள் இத்துறையில் தங்களுடைய முதலீடுகளை மேற்கொண்டுள்ளன.விமானம் மற்றும் வானுார்தி உதிரிபாகங்கள் உற்பத்திக்காக கோவையில் தொழில் பூங்கா அமைக்கப்படும்.அதன் தொடர்ச்சியாக, சூலுாரில் ஒரு தொழிற்பேட்டை பூங்கா அமைக்கப்படும். இதன் வாயிலாக, தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மேன்மை அடையும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.முன்னதாக, தொழில் துறை அரசு கூடுதல் தலைமை செயலர் கிருஷ்ணன் வரவேற்றார்.தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, டி.வி.எஸ்., நிறுவன தலைவர் வேணு சீனிவாசன், பண்ணாரியம்மன் குழு தலைவர் பாலசுப்ரமணியன், ஜி.ஆர்.ஜி., மற்றும் பி.எஸ்.ஜி., நிறுவனங்களின் நிர்வாகி நந்தினி ரங்கசாமி, கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (15)

 • sankar - Nellai,இந்தியா

  சிரிப்பதை தவிர வேறு வழியில்லை

 • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

  இப்படித்தான் போன ஆட்சியில் படம் காட்டினார்கள். என்ன ஆயிற்று. இப்போது இவர்கள் படம் காட்டுகிறார்கள். மக்கள் எப்போதும் போல் வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.

 • DVRR - Kolkata,இந்தியா

  35 ஆயிரத்து 208 கோடி ரூபாய் முதலீட்டில்??ஒப்பந்தம் செய்துள்ளது.''இதன் வாயிலாக, நாம் ஒரு டிரில்லியன் டாலர் - 75 லட்சம் கோடி, பொருளாதாரம் என்ற லட்சிய இலக்கை அடைந்து???35,208 கோடி எப்படி 75 லட்சம் கோடி???அவர்கள் அவ்வளவு வியாபாரம் செய்வார்களா என்ன??எவ்வளவு முதல் போடுகின்றோமோ அந்த அளவுக்கு வியாபாரம் நடந்தாலே அற்புதம். போட்ட பணம் விரைவில் திரும்பும் என்று அதிக நம்பிகை கொள்ளமுடியும்???35,208 x 200 மடங்கு=75 லட்சம் கோடி Simply Impossible.

 • sankaseshan - mumbai,இந்தியா

  34 ஆயிரம் கோடியில் 30 % கமிஸ்ஸின் எஞ்சிய பணத்தில் வேலை நடக்கும் தரமும் அப்படிதான் இருக்கும்

 • DVRR - Kolkata,இந்தியா

  அப்போ நீ சொன்ன மாதிரியே " மோடி அதானிக்கு இந்தியாவை விற்று விட்டார்" இன்று ஸ்டாலின் "டாஸ்மாக்கினாட்டை அதானி + மற்றவர்களுக்கு விற்று விட்டார்" என்று சொல்லலாமே

Advertisement