dinamalar telegram
Advertisement

நூல் விலையை குறைக்க பழனிசாமி வலியுறுத்தல்

Share
Tamil News
சென்னை : 'நுால் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தின் 45 சதவீத நுாற்பாலைகள், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் மாவட்டங்களில் உள்ளன. கடந்த 10 மாதங்களில், அனைத்து நுால் ரகங்களுக்கும், கிலோவுக்கு 120 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.இந்த மாதம் முதல் வாரத்தில் அனைத்து ரகங்களுக்கும், கிலோவுக்கு அதிரடியாக 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நெசவாளர்கள், ஆயத்த ஆடைகள், பின்னலாடை தயாரிப்பாளர்கள், மாவட்டம் தோறும் தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.எனவே, ஜவுளி உற்பத்தியாளர் சங்கத்தினர், கைத்தறி மற்றும் விசைத்தறி சங்கத்தினர், ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் போன்றவற்றை அழைத்து பேசி, அவர்கள் குறைகளை போக்க வேண்டும்.
இறக்குமதி பஞ்சுக்கான வரியை குறைக்கவும், மூலப்பொருள் ஏற்றுமதியை தடை செய்யவும், நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பஞ்சு, நுால் பதுக்கலை கண்டறிந்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நுால் மற்றும் பஞ்சுக்கு விதிக்கப்படும், 5 சதவீதம் ஜி.எஸ்.டி., வரியை முழுமையாக ரத்து செய்ய, ஜி.எஸ்.டி., குழு கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும். இலவச வேஷ்டி, சேலை தயாரிப்பதற்கான நுாலை, நெசவாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் நாளை 'பந்த்



'பஞ்சு, நுால் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கமான 'டீமா' சார்பில், நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
அனைத்து பின்னலாடை உற்பத்தியாளர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், வணிகர் சங்கங்கள், தியேட்டர் உரிமையாளர் சங்கம், அரசியல் கட்சியினர் என, நுாற்றுக்கும் மேற்பட்ட அமைப்பினர் முழு அடைப்புக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
பின்னலாடை ஆடை உற்பத்தியை நிறுத்தியும், கடைகளை அடைத்தும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. நாளை காலை, 9:30 முதல் மாலை 6:00 மணி வரை, மாநகராட்சி அலுவலகம் முன், அனைத்து அமைப்பினர் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • sankar - சென்னை,இந்தியா

    நூல் விலை இருக்கட்டும். நீர் நல்ல நூல்களைப் படித்து பொழுதைப் போக்குங்கள் அய்யா.

  • sankar - சென்னை,இந்தியா

    அடடா, எப்பேர்ப்பட்ட சமூக அக்கறை பாருங்கள்.

  • rajan -

    உங்க ஆட்சில என்னத்த குறைச்சீங்க. பெட்டி பெட்டியா கமிஷன் அடித்து இரண்டு பேரும் பதுக்கி வச்சிருக்கீங்க. உங்க வீட்டில ரெய்டு வராதா. 2000 ரூ செல்லாது என்று அறிவித்தால் நீங்க எல்லாரும் மாரடைப்பு வந்து செத்துருவீங்க.

Advertisement