dinamalar telegram
Advertisement

ஒரு குறளுக்கு 1 டாலர் பரிசு! :அமெரிக்காவில் அசத்தும் புதுகை இன்ஜினியர்

Share
Tamil News
புதுக்கோட்டை :புதுக்கோட்டையைச் சேர்ந்த பொறியியல்பட்டதாரி, அமெரிக்காவில் தமிழ் பள்ளி நடத்தி,திருக்குறள் பாடத்துக்கு பரிசுகள் வழங்கிஅசத்தி வருகிறார்.புதுக்கோட்டை மாவட்டம், ராயவரத்தைச் சேர்ந்தவர் ராமன் வேலு. பொறியியலில் இளங்கலை பட்டம், வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டம்
பெற்றார்.

அங்கீகாரம்சிறப்பான பங்களிப்புக்காக, கவுரவ டாக்டர்பட்டமும் பெற்றுஉள்ளார்.மனைவி விசாலாட்சியுடன், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலம், டல்லாஸ் நகரில் தங்கி,சாஸ்தா தமிழ் அறக்கட்டளை, பிளோனோ தமிழ் பள்ளி ஆகியவற்றை ராமன்வேலு நடத்தி வருகிறார்.

இவர்கள் பள்ளியில் தமிழ் கற்றுக் கொடுக்கஅங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.தமிழ் மீது கொண்ட பற்று காரணமாகவும், திருக்குறள் மீதுள்ள ஈர்ப்பு காரணமாகவும் ஒரு திருக்குறள்கூறினால் 1 டாலர் பரிசு என அறிவித்து,ஆண்டுதோறும் போட்டி நடத்தி வருகிறார்.இவர் நடத்தும்பள்ளியில் 400 மாணவர்கள் திருக்குறள் கற்றுவருகின்றனர்.

எதிர்பார்ப்புநமது நிருபரிடம், ராமன்வேலு கூறியதாவது:என் மனைவியின் சகோதரி மூலமாக அமெரிக்காவுக்கு 2013ம் ஆண்டு வந்து, ஐ.பி.எம்., நிறுவனத்தில் 'சீனியர் கன்சல்டன்ட்' மற்றும் பல்வேறு நிறுவனங்களில் மனிதவள அதிகாரியாக பணியாற்றினேன்.நாங்கள் நடத்திவரும் பள்ளியில் 1,330 திருக்குறள்களில்
ஒன்றையாவது, பொருளுரையுடன் கூறினால் 1 டாலர் பரிசு என அறிவித்து செயல்படுத்தி வருகிறேன்.
இது நல்ல வரவேற்பை பெற்றது. இப்போதுஅமெரிக்கா மட்டுமின்றி, உலக அளவில் இந்த போட்டியை நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழர்களிடையே உருவாகிஉள்ளது.இவ்வாறு அவர்கூறினார்.ராமன்வேலு,'மனநிறைவுடன்வாழ ஏழு வழிகள்' என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.இவரது மகன், மகள் ஆகியோரும், தந்தை வழியில் தன்னார்வ பணிகள், தமிழ் ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • Dr.Arun - Madurai,இந்தியா

    வாழ்த்துக்கள் ஐயா. உங்கள் பணி உலகின் அனத்துப் பகுதிக்கும் சென்றடையட்டும். பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

    திருக்குறள் சாதாரண அறிவியல் நூலில்லை. இதையும் கடந்து மெய்யறிவு நூலாக இயங்குகின்றது. அறிவியல் பஞ்ச பூதங்களை மட்டும் உள்ளடக்கியது. மெய்யறிவு இதையும் கடந்துச் செல்கின்றது. இறைவனை நோக்கி பயணிக்கின்றது. ஆகையால் திருமுறைகள் போன்று திருக்குறளும் சைவ சித்தாந்த நூல். முழுப் பொருளுரையை யாராலும் கூறமுடியாது. முதல் பத்துப் பாடல்களும் கடவுள் வாழ்த்துப் பாடல்கள். பூசைக்கு உரிய பாடல்கள். ஆகையால் உலக முழுதுமுள்ள தமிழர்கள் பூசைக்கு மட்டும் இன்றி இனிமேல் எல்லாத் தமிழர் நிகழ்ச்சிகளிலும் முதல் நிகழ்ச்சிப் பாடலாக பாடவேண்டுமென்று மிகத் தாழ்மையோடு கேட்டுக் கொள்கின்றேன். உலகிலுள்ள எல்லாத் தமிழர்களுக்கும் நல்லுறவுப் பாலமாகவும் ஒற்றுமைப் பாலமாகவும் இனிமேல் திருக்குறள் அமையட்டும். முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியிடம் பிடித்த இரண்டு விஷயங்களில் இதுவுமொன்று. முக்கடல் சந்திக்கும் கன்யாக் குமரியில் உலகமுழுதும் காண வள்ளுவனுக்கு சிலை வைத்தது. நம் பழமையான தொன்மை வாய்ந்த வரலாற்றில் எந்த ராசாவும் செய்யத் தவறியப் பணியை அவர் செய்ததுதான். இனிமேல் வளரட்டும் நம் தமிழ்ப் பணிகள்.

Advertisement