இரண்டாவது அலை
இந்தாண்டு ஜனவரியில் இதை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த தடுப்பூசிக்கு, உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அங்கீகாரம் அளித்தது.பி.பி.வி., 152 என்று அழைக்கப்படும் இந்த கோவாக்சின் தடுப்பூசி தொடர்பான இறுதிக்கட்ட ஆய்வில், அதன் செயல்திறன் 77.8 சதவீதம் என, கூறப்பட்டிருந்தது.இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இருந்து வெளியாகும் லான்செட் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுஉள்ளதாவது:கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இந்தி யாவில் தீவிரமாக இருந்தபோது, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், ஏப்., 15 முதல் மே 15 வரை பரிசோதனை நடத்தப்
பட்டது. கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருந்த, பரிசோதனை மேற்கொண்ட 2,714 மருத்துவமனை ஊழியர்களுக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இந்த 2,714 பேரில், 1,617 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. அதே நேரத்தில் 1,097 பேருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது.இவர்கள் அனைவருக்கும், 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பரிசோதனை
அதில் இதன் செயல்திறன் 50 சதவீதம் என்பது தெரியவந்தது. நாட்டில் நடத்தப்பட்ட முதல் களப் பரிசோதனை இதுவாகும்.ஆய்வகத்தில் நடந்த பரிசோதனை முடிவுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகும். அதே நேரத்தில் நோய் தொற்று பாதிப்பு உள்ளவர்களுடன் அதிக நேரம் இருந்தது போன்றவை காரணமாக, மருத்துவமனை ஊழியர்களிடம் செயல்திறன்
இப்பெல்லாம் வெள்ளைக்காரனுக்கு இந்தியான்னா ஒரு பீதி.