dinamalar telegram
Advertisement

இலவச அரிசி வழங்கும் திட்டம் மார்ச் மாதம் வரை நீட்டிப்பு

Share
Tamil News
புதுடில்லி :ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 கிலோ இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கும் திட்டம், அடுத்த ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.நம் நாட்டில், கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், மக்கள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தனர்.

அவர்களின் நலனை கருத்தில் வைத்து, 'பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா' திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் 80 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு, 5 கிலோ இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.இந்த திட்டம் முதலில் மூன்று மாதங்களுக்கு மட்டுமே அமல்படுத்தப்பட்டது. கடந்த 2020 ஏப்ரல் முதல், 2020 ஜூன் வரை அமலில் இருந்த இந்த திட்டம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.வரும் 31ம் தேதியுடன் காலாவதியாக இருந்த நிலையில், இந்த திட்டத்தை அடுத்த ஆண்டு மார்ச் வரை நீட்டித்து, மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அமைச்சரவை கூட்டத்திற்குப் பின், தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியதாவது:ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 கிலோ இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கும் திட்டம், 2022 மார்ச் வரை நீட்டிக்கப்படுகிறது. இதற்கு, 53 ஆயிரத்து 344 கோடி ரூபாய் கூடுதலாக செலவு செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு மொத்தமாக இதுவரை, 2.6 லட்சம் கோடி ரூபாய் செலவாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • அப்புசாமி -

    ஒரு பக்கம் பொருளாதாரம் 16 கால் பாய்ச்சலில் போவுதுன்னு முழக்கம். இன்னொரு பக்கம் 80 கோடி மக்களுக்கு ரேஷன் பிச்சை.நாடு எங்கேயோ போகப் போகுது. எங்கேன்னுதான் தெரியலை.

  • DHESIKAN - COIMBATORE,இந்தியா

    தேர்தல் வியாதி

  • rajan - erode,இந்தியா

    தேர்தல் முடியும் வரை என்றே சொல்லியிருக்கலாம்

  • ssh - mali,மாலத்தீவு

    இலவச அரிசி பெரும்பாலும் ரேசன் கடை ஊழியர்களால் கொள்ளை அடிக்கவும் பயன்படுகிறது.

Advertisement