வரும் 2022 ஜன., 26 வரை அவகாசம் அளிப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.விவசாயிகளின் நலனுக்காக, மூன்று வேளாண் மசோதாக்கள் கடந்தாண்டு பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டு, சட்டமானது. ஆனால், இந்த சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சில விவசாய அமைப்பினர், டில்லி எல்லையில் கடந்தாண்டு நவம்பரில் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினர். இவர்களுடன் மத்திய அரசு பல சுற்று பேச்சு நடத்தியும், போராட்டம் முடிவுக்கு வரவில்லை.
வலியுறுத்தல்
இந்நிலையில், விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்தார். இந்த நல்ல சட்டங்கள் குறித்து குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியாததற்கு மன்னிப்பு கேட்பதாகவும் அவர் கூறினார். போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் வீடு திரும்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இந்த அறிவிப்பை விவசாய அமைப்புகள் வரவேற்றுள்ளன. அதே நேரத்தில், 'பார்லி.,யில் இதற்கான மசோதாவை நிறைவேற்ற வேண்டும்' என, வலியுறுத்தின. அதே நேரத்தில், உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடப்பதால், சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.பிரதமர் அறிவித்தபடி, வரும் 29ம் தேதி துவங்க உள்ள பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில், விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
அமைச்சரவை ஒப்புதல்
அதன்படி, பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதாவை தாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, 'வரும் 29ல் பார்லிமென்ட் நோக்கி டிராக்டர் பேரணி உள்ளிட்ட தங்களுடைய போராட்டங்கள் தொடரும்' என, விவசாய சங்கங்கள் ஏற்கனவே அறிவித்திருந்தன.
எங்களுடைய ஆறு அம்ச கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். இதற்காக அரசு எங்களுடன் பேச்சு நடத்த வேண்டும்.
வரும் 2022 ஜன., 26க்குள், அதாவது குடியரசு தினத்திற்குள் எங்களுடைய கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றினால், போராட்டத்தை கைவிட்டு, வீடு திரும்புவோம். தேர்தல் நடத்தை விதிகள் அறிவிக்கப்பட்ட பின், சட்டசபை தேர்தல் குறித்து எங்களுடைய கருத்தை தெரிவிப்போம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்து, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையிலும், விவசாய சங்கங்கள் புதிய கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன. போராட்டத்தை கைவிட மறுத்து முரட்டு பிடிவாதம் பிடிப்பதாக, பல்வேறு தரப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கேட்பது என்ன?
தங்களுடைய ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, பிரதமர் மோடிக்கு, விவசாய சங்கங்களை ஒருங்கிணைக்கும் அமைப்பான, சம்யுக்த கிஷான் மோர்ச்சா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், அவர்கள் குறிப்பிட்டுள்ள ஆறு அம்ச கோரிக்கைகள்:
* எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட உத்தரவாதம்
* டில்லி, ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகளுக்கு எதிரான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்
* போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு நினைவிடம் கட்ட, சிங்கு எல்லையில் இடம் ஒதுக்க வேண்டும். உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்
* மின்சார திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்
* தேசிய தலைநகர் பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் காற்று மாசு நிர்வாக கமிஷன் நிர்ணயித்துள்ள அபராதம் வசூலிக்கும் நடைமுறையை நீக்க வேண்டும்
* உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூரில் கார் மோதி விவசாயிகள் இறந்த சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
இவர்களுக்கு 5 மாநில தேர்தல் முடிந்த உடன் தகுந்த பாடம் கற்பிக்க படும் என்று நம்புகிறேன்.