ADVERTISEMENT
தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ்: பொதுத்தேர்வு எழுத உள்ள, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மற்ற மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கொரோனா பாதிப்பு குறைந்தால், சுழற்சி முறையும் கைவிடப்படும்.
'டவுட்' தனபாலு: 'தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி தோன்றியதும் தான், கொரோனாவை முதல்வர் ஸ்டாலின் விரட்டி அடித்து விட்டார்' என, உங்கள் கட்சியினர் புளகாங்கிதம் அடைகின்றனர். ஆனால், நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இன்னமும் கொரோனா பீதி விலகவில்லையோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. உங்கள் கட்சியினரே, ஸ்டாலின் கொரோனாவை விரட்டி விட்டார் எனக் கூறுகையில், கொரோனா இருக்கிறது எனக் கூற 'கெத்து' வேண்டும் தான்!
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி: ஜம்மு - காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்களில் பணியாற்றி உள்ளேன். ஒவ்வொரு சவாலையும், எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பாக கருதியுள்ளேன். வாழ்க்கையில் சவால் இல்லை என்றால் உயர்வு இருக்காது; சவால்களை சந்திக்க வேண்டும். அப்போது தான் வளர்ச்சி அடைவோம்.
'டவுட்' தனபாலு: மாணவர்கள் மத்தியில் பேசிய நீங்கள், சவால்களை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளீர்கள். உங்களின் அறிவுரை அவர்களை நிச்சயம் சென்றடையும் என்பதில் எந்த, 'டவுட்'டும் இல்லை. ஆனால், அதே நேரத்தில் தமிழக கவர்னர் பணி, சவால் நிறைந்ததாக இருக்கிறதா, இல்லையா என்பதை சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்குமே!
கேரள பா.ஜ., தலைவர் கே.சுரேந்திரன்: சிரியா போல கேரளாவும் கொலைகளமாக மாறி வருகிறது. பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., ஆதரவாளர்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிக்கும், பிரிவினைவாத அமைப்புக்கும் ரகசிய உறவு உள்ளது. மாநிலத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியும் ஆதரவளிக்கின்றன.
'டவுட்' தனபாலு: அரசியல் காரணங்களுக்காகவும், ஓட்டு அரசியலுக்காகவும் பிரிவினைவாதத்தை வேரறுக்காமல் விட்டால், மிகப் பெரிய பாதிப்பை கேரளா சந்திக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை. ஏனெனில், அங்கு நடக்கும் மத படுகொலைகள், பக்கத்து மாநிலமான நம் தமிழகத்திற்கும் பரவி விடக் கூடாது. தமிழக போலீஸ் உஷாராக இருக்க வேண்டும்!

அவர் வெளிப்படையாக வேறு சொல்ல வேண்டுமா? கொஞ்சம் பொறுத்த பின் மெல்ல மெல்லக் கிளம்பும் தடாலடியாக ஆரம்பித்து பேரைக் கெடுத்துக்கொள்ள மாட்டார்