Load Image
dinamalar telegram
Advertisement

கவர்னருடன் பன்னீர் சந்திப்பு

சென்னை : அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், நேற்று கவர்னரை சந்தித்து பேசினார்.



தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம், நேற்று காலை கவர்னர் மாளிகைக்கு சென்றார். கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அரை மணி நேரம் சந்திப்பு நடந்தது. அ.தி.மு.க., அமைப்பு செயலர் ஜே.சி.டி.பிரபாகரும் உடனிருந்தார்.

பன்னீர்செல்வம், தன் மனைவியின் மறைவு காரணமாக, கவர்னர் பதவியேற்பில் பங்கேற்கவில்லை. எனவே, நேற்று அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசி உள்ளார். சந்திப்பின் போது என்ன பேசினர் என்ற விபரம் வெளியாகவில்லை. 'இது மரியாதை நிமித்தமான சந்திப்பு' என அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement