சேலம் - கோவை பைபாஸ் ரோட்டில் தமிழ்நாடு அரசு விரைவு பஸ் கவிழ்ந்து விபத்து
அவிநாசி: சேலம் - கோவை பை பாஸ் சாலையில் பயணித்த தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து, அதிகாலையில் விபத்துக்குள்ளானதில், 13 பேர் காயமடைந்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து இரவு, 9:30 மணிக்கு புறப்பட்டு, கோவை நோக்கி தமிழ்நாடு அரசு விரைவு பஸ் வந்துக் கொண்டிருந்தது. அவிநாசி எம்.நாதம்பாளையம் பிரிவு பகுதியில் வந்த போது, நிலைத்தடுமாறி, ரோட்டின் மையத்தில் கவிழ்ந்தது. தகவலறிந்த அவிநாசி தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்ரமணியம் தலைமையிலானா தீயணைப்பு வீரர்கள், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் மற்றும் நெடுஞ்சாலை போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் கட்டனம்பள்ளியை சேர்ந்த மனோன்மணி, 40, ஒசூரை சேர்ந்த ரமேஷ், 56, கோவை, கணுவாயை சேர்ந்த, முனாப், 41, தர்மபுரி, பாப்பிரப்பட்டியைச் சேர்ந்த வாணீஸ்வரி, 39, ஒசூரை சேர்ந்த சின்னம்மாள், 48, சேரன்மாநகரைச் சேர்ந்த குருவம்மாள், 29, ஒசூரை சேர்ந்த, முனிராஜ், 69, தர்மபுரி பாப்பிரப்பட்டியை சேர்ந்த, கருணாநிதி, 43, ஒசூரைச் சேர்ந்த சின்னப்பன், 53, தர்மபுரி, கடத்துாரை சேர்ந்த மணி, 37, ஒசூர், ஆவரப்பள்ளி ரோடு பகுதியைச் சேர்ந்த, துரைசாமி, 62 உட்பட, 13 பேர் காயமடைந்தனர். அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர்கள், திருப்பூர் அரசு மருத்துவமனைக் கல்லுாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், 8 பேருக்கு எலும்பு முறிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!