dinamalar telegram
Advertisement

வங்கி கடன் மோசடியாளர்களை விட்டுவிட மாட்டோம்: நிர்மலா

Share
ஜம்மு :''வங்கியில் கோடி கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்தவர்களை சுதந்திரமாக திரிய விட்டுவிட மாட்டோம். அவர்களை பிடித்து அவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்வோம்'' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஸ்ரீநகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: ஜம்மு - காஷ்மீர் வளர்ச்சியில் மத்திய அரசு மிகவும் அக்கறை கொண்டுள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்பதற்கு முன் தேசிய வங்கிகள் வாயிலாக பலருக்கு கோடிக் கணக்கில் கடன் வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிவிட்டனர். ஆனால் அவர்களை சுதந்திரமாக திரிய மத்திய அரசு ஒரு போதும் அனுமதிக்காது. வங்கியின் கடன் வாங்கி மோசடி செய்தவர்கள் மீதான வழக்கை விரைவாக விசாரித்து அவர்களிடமிருந்து பணத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பதுங்கியுள்ளவர்களை இந்தியா வுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. வங்கிக் கொடுத்த கடன் மீண்டும் வசூலிக்கப்படும் என்பது நுாறு சதவீதம் நிச்சயம்.கடனை திருப்பி செலுத்தாமல் வெ ளிநாடுகளுக்கு தப்பித்தவர்களின் பல கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (18)

  • vpurushothaman - Singapore,சிங்கப்பூர்

    விட்டு விட மாட்டோம். வெளிநாட்டிற்குத் தப்பி விடச் செய்வோம். ஓடிப்போனவர்கள் இன்னமும் ஜோராக வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே ?

  • Sampath Kumar - chennai,இந்தியா

    இப்ப படிப்புக்கு கூட வரி போட்ட தாராள மனசு யாருகிவரும்

  • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

    மோடி...அட அமித் சேட் பற்றிக்கூட சொல்லலாம்... ஆனால் இந்தம்மாவை பற்றி எழுதினால் தெய்வகுத்தமா பார்க்கப்பட்டு... இவரோட ஸ்டேட்மெண்டை சுதந்திர மற்றும் குடியரசு தின விழாவில் சம்பிரதாயமான சொல்லப்படும் ""இந்தியா வல்லரசாகும்"" லெவலில் தான் பார்க்கணும்.. வேறென்ன சொல்ல..??

  • Vivekanandan Mahalingam - chennai,இந்தியா

    சிதம்பரம் கிட்ட கேக்க வேண்டிய கேள்வியெல்லாம் நிர்மலா விடம் கேட்கும் மக்கள். மன்மோகன் சிங் தூங்கினப்போ யாரும் அவரை எழுப்பல - இப்போ மோடி விடம் கேள்வி கேக்கிறார்கள்

    • abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா

      உங்க மோடி முழிச்சிட்டே தானே இருக்காரு அப்புறம் எப்படி உங்க மோடி ஆட்சியில் கம்பி நீட்டினானுங்க ????

  • அறவோன் - Chennai,இந்தியா

    "மோசடி செய்தவர்களை சுதந்திரமாக திரிய விட்டுவிட மாட்டோம்". - வெளிநாடுகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைப்போம்

Advertisement