ADVERTISEMENT
கரூர்:வீட்டு மனைகளை முறைப்படுத்த, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, வட்டார வளர்ச்சி அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் சக்திவேல், 45; இவர் க.பரமத்தியில் நான்கு வீட்டு மனைகளை, தன் மனைவி பெயரில் முறைப்படுத்தி வழங்க வேண்டும் என, வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேல், 45, என்பவரிடம் மனு அளித்தார்.அதற்கு குமாரவேல், 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
சக்திவேல், கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். நேற்று மாலை சக்திவேல், க.பரமத்தி யூனியன் அலுவலகத்தில் இருந்த குமாரவேலிடம் 25 ஆயிரம் ரூபாய் வழங்கினார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், குமாரவேலை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!