நீர் நிலைகளை பாதுகாக்க சென்னை, சேலத்தில் படை
சென்னை:ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை பாதுகாக்க, வல்லுனர்கள் அடங்கிய சிறப்பு பறக்கும் படையை ஏற்படுத்த, மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகள் உள்ளன. நீர்வளத் துறை வருவாய் துறை, உள்ளாட்சி அமைப்புகள் பராமரிப்பில் இந்த நீர் நிலைகள் உள்ளன.இருப்பினும், உள்ளூர்அரசியல் கட்சியினர் ஆதரவுடன் இந்த நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.
பல இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள், பொது மக்கள், தொழில் துறையினர் கழிவுகளை கொட்டி நீர் நிலைகளை அழிப்பதும் நடக்கிறது.ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் நிலைகளை மீட்பது போன்று, கழிவுகளில் இருந்தும் நீர் நிலைகளை மீட்க வேண்டியது அவசியமாக உள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் குப்பை, கழிவுகளை கொட்டுவதை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.இதில் நீர் நிலை பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க பறக்கும் படையை ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இது குறித்து, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:குப்பை, கழிவுகள் கொட்டப்படுவதில் இருந்து நீர் நிலைகளை பாதுகாக்க, சிறப்பு பறக்கும் படையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் தொடர்பான வல்லுனர்கள் அடங்கிய சிறப்பு பறக்கும் படையை முதல் கட்டமாக, சென்னை மற்றும் சேலத்தில் ஏற்படுத்த முடிவாகி உள்ளது.மாசு கட்டுப்பாட்டு வாரியம் வாயிலாக இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. சிறப்பு பறக்கும் படையின் அதிகார வரம்புகளை இறுதி செய்வதற்கான பணிகள், விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!