dinamalar telegram
Advertisement

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ‛ஹலால் உணவு கட்டாயமா: பிசிசிஐ விளக்கம்

Share
புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு உணவு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதனால், வீரர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு சுழற்சி முறையில் வீரர்களை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளது. இந்நிலையில், வீரர்களின் உணவு விஷயத்திலும் பிசிசிஐ கட்டுப்பாடு விதித்துள்ளதாக செய்தி வெளியானது. அதாவது, இந்திய வீரர்கள் அனைவரும் அடுத்த உத்தரவு வரும்வரை, ஹலால் செய்யப்பட்ட உணவை மட்டும்தான் சாப்பிட வேண்டும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவற்றை தவிர்த்துவிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவுகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. வீரர்கள் என்ன சாப்பிட வேண்டும்? என்ன சாப்பிட கூடாது என பிசிசிஐ முடிவு செய்வதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், வீரர்களுக்கு உணவு கட்டுப்பாடு விதித்ததாக வெளியான செய்திக்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது. 'உணவு விஷயத்தில் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை,' என பிசிசிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (11)

  • Nachiar - toronto,கனடா

    ஹலால் என்னும் சொல்லை ஹலால் என்றே அழைக்க வேண்டும். அனாவசிய மொழி பெயர்ப்புகளை தவிர்ப்பது சகல மதத்தினருக்கும் அவரவர் கலாச்சாரத்திற்கும் நல்லது. வேதம் பைபிள் குரான் எல்லாம் எப்படி வேறு வேறு மதத்திற்குரிய சொல்லோ அதை அப்படியே தான் பாவிக்க வேண்டும் இன்னொரு மொழியில் மதத்தில் இருந்து அந்தந்த மதத்திற்கு மொழிக்கு மட்டுமே பொருந்தாக் கூடிய உரிய சொற்கள் திருடப் படக் கூடாது.

  • magan - london,யுனைடெட் கிங்டம்

    இந்த முற்கனுங்க இப்ப என்ன பன்றானுங்கன புதுசா ஒரு ஹோட்டல் திறந்தா நெறய உணவுகளை ஆர்டர் கொடுத்து விட்டு இது ஹலால் தானே என்று கேட்பார்கள் இல்லை என்றால் உணவு வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள் ஒரு உணவு விஷயத்தில் கூட தன் இனம் மட்டும் தான் வாழவேண்டும் ஏன் மாயாண்டி முனியாண்டி இடம் இருந்து கரி வாங்கோனால் செரிக்காத

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    நல்ல வேளை நான் சைவம் என்பதால் இந்த மாதிரி அசிங்கத்தில் இருந்து தப்பித்தேன்.

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    இந்த கிரிக்கெட்டே நாட்டுக்கு வேஸ்ட். இதில் இவர்கள் உணவு பற்றிய செய்திகள் அதைவிட வேஸ்ட். சினிமா காரர்களும் கிரிக்கெட் ஆடுபவர்களும் சோம்பேறி மக்களால் வளர்க்கப்பட்ட கோடீஸ்வரர்கள்.

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    ஹலால் என்பதனின் தமிழ் வார்த்தை என்ன? எல்லாரும் அந்த வந்தேறி மொழியை தான் தமிழுக்கு பதிலாய் பயன்படுத்துகிறீர்கள்

Advertisement