dinamalar telegram
Advertisement

வீரமும், விவேகமும் மிகுந்த போலீஸ்துறை என்பதை நிரூபித்த பூமிநாதன்: டி.ஜி.பி சைலேந்திரபாபு

Share
Tamil News
திருச்சி: ஆடு திருடும் கும்பலை பிடித்தபோது படுகொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ பூமிநாதன், போலீஸ்துறை வீரமும், விவேகமும் மிகுந்தது என்பதை நிரூபித்துள்ளார் என டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

திருச்சியில் ஆடு திருடும் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட பூமிநாதன் வீட்டுக்கு, டி.ஜி.பி சைலேந்திரபாபு நேரில் சென்று பூமிநாதனின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ.,யாக இருந்த பூமிநாதன், கமெண்டோ பயிற்சி பெற்றவர். சிறப்பான பணிக்காக முதல்வர் பதக்கமும் பெற்றுள்ளார். கடமையும் பொறுப்பும் விவேகமும் மிகுந்த பூமிநாதன் ரோந்து பணியில் இருந்த போது, மூன்று பேர் ஆடு திருடி கொண்டு டூவீலரில் சென்றதை பார்த்ததும், தைரியமாக செயல்பட்டு அவர்களை மடக்கிப் பிடித்து உள்ளார். அவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளார்.
பிடிபட்டவர்களில் சிறுவர்கள் இருந்ததால், சட்டப்படி சிறுவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அறிவுரை கூறி அவர்களை ஒப்படைக்க காத்திருந்தார். பிடிபட்ட குற்றவாளியும், சிறுவர்களும் திடீரென தாக்குதல் நடத்துவார்கள் என்று பூமிநாதன் எதிர்பார்க்கவில்லை. வீரமும் விவேகமும் மிகுந்தது போலீஸ் துறை என்பதை, பூமிநாதன் நிரூபித்திருக்கிறார். போலீஸ் துறை துவக்கப்பட்ட 1856ம் ஆண்டிலிருந்தே, போலீசார் மீது தாக்குதல் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த அளவிற்கு சவால் மிக்க துறையாக போலீஸ் துறை விளங்குகிறது.
சில நேரங்களில் உயிருக்கு பாதிப்பு ஏற்படுவதும் இயற்கைதான். இந்த சம்பவத்தில் எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் உயிர்த்தியாகம் செய்து கடமையாற்றி இருக்கிறார். தனியாக ரோந்து செல்லும் போலீசாரின் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் மட்டத்தில், துப்பாக்கிப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துபவர்கள் மீது ஆயுதப் பிரயோகம் செய்யலாம் என்று சட்டம் உள்ளது. அதனால் உயிரை பாதுகாத்துக் கொள்வதற்கு, துப்பாக்கி பயன்படுத்துவதற்கு போலீசார் தயங்கக்கூடாது.

தவறு செய்யும் சிறுவர்களை திருத்துவதற்கு, அமைப்புகள் இருந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. சென்னையில் 52 பாய்ஸ் கிளப்புகள் துவங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் மூன்று பேர் மட்டுமே இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. ஆடு திருடும் சம்பவங்கள் ஒட்டுமொத்தமாக இருக்கக் கூடாது என்று கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து (10)

 • Sampath Kumar - chennai,இந்தியா

  அன்னே அருணாச்சலம் ஆயுதம் எல்லாம் இருந்துச்சு நினைத்தால் பயன் படுத்தி இருக்கலாம் அனல் சிறுவர்களை உள்ளார்களே என்று சற்று இறக்கப்பட்டார் அதனால் இறக்கடிக்க பட்டார் அவரது ஆன்ம ஷாந்தி அடைய வேண்டுகிறேன்

 • Kumar - Madurai,இந்தியா

  ஆடு திருடுபவர்கள் இப்படி தாக்குதல் நடத்த மாட்டார்கள். மிக மோசமாக தாக்குதல் திருட்டின் போது செய்பவர்கள் அந்த ஜெய்பீம் கூறிய ஆட்கள் தான். அவர்கள் திருட்டுடன் பாலியல் வன்கொடுமையும் செய்பவர்கள். வாழ்க வளமுட.வாழ்க வையகம்.

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  பூமிநாதன் போன்று ஒரு சில நல்ல அதிகாரிகள் காவல்துறையில் இருப்பது உண்மைதான். ஆனால், என்ன செய்வது காவல்துறையில் ஏறக்குறைய 90 சதவீதம் கருப்பு ஆடுகளாகத்தான் இருக்கின்றன என்பதை உண்மை. இதை யாரும் மறுக்க முடியாது. இன்றைக்கு சமூகத்தில் நிலவும் குற்றங்களுக்கு காவல்துறையினர் குற்றவாளிகளுடன் கூட்டு சதியில் ஈடுபடுவதை இல்லையென்று கூற முடியுமா? காவல் துறையினர் நேர்மையாக நடந்தால் அவர்களுக்கு மக்களே பாதுகாப்பு கொடுப்பார்கள் என்பதே உண்மை. நீதித்துறை மற்றும் காவல்துறைகளில் சீர்திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே வருங்கால சமூகம் அமைதியாக வாழ முடியும். இல்லையேல், பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தை கையில் எடுப்பதை தடுக்க முடியாது.

 • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

  தலைவரே ...மொதல்ல நீங்க இந்த பிள்ளைகளுக்கு மனச்சோர்வு நீக்குற வகுப்பு எடுக்கறதை கொஞ்ச நாளைக்கு தள்ளி வச்சிட்டு காவல்துறையில் எங்கெங்கு குறைபாடுகள் உள்ளனவோ அதை பட்டியலிட்டு நவீனப்படுத்த அணைத்து நடவடிக்கைகளை துரிதமாக எடுங்க ..இரவு ரோந்துக்கு ஆயுத பயிற்சி பெற்றுள்ள காவல் துறையினரை பணியில் அமர்த்துவதுவும் குற்றவாளிகளை பிடிக்க தற்காப்பு பயிற்சி பெற்றுள்ள காவல்துறையினரை அனுப்புவதுவும் தான் சிறந்தது ...

 • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

  தனியாக சென்றது கூட தவறு என்று நினைக்கிறன் .யாரையும் குறைத்து எடை போட கூடாது. சிறுவர்கள் தான் என்று நினைத்து கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்து இறுக்க வேண்டும் ..பிடித்தவுடன் ரோந்து வாஹனம் ஏன் உடன் வரவில்லை .இது போல் இனி நடக்க கூடாது ..

Advertisement