கேரளாவில் பாக்கெட்டில் தக்காளி விற்பனை; இரண்டு பழம் ரூ.18 மட்டுமே!
ஒட்டன்சத்திரம் : கேரளாவில் பாலிதீன் கவரில் அடைத்து தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு பழம் விலை ரூ.18 ஆகும்.

தமிழகம், கேரளாவில் பெய்து வரும் தொடர்மழையால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல காய்கறிகள் அதிகபட்ச விலைக்கு விற்பனையாகின்றன. தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்தவாறு உள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.15 முதல் 20 வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் மழை பெய்ய தொடங்கியதால் பந்தல் தக்காளி மட்டுமே தப்பிப் பிழைத்தது. தரையில் விளையும் தக்காளி முற்றிலும்அழிந்துவிட்டது. இதனால் மார்க்கெட்டிற்கு இந்த தக்காளி வரத்து 25 சதவீதமாக குறைந்தது. வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு தக்காளி ஏலம் எடுத்ததால் விலை கிடுகிடுவென அதிகரித்தது.
நேற்று ஒரு கிலோ தக்காளி அதிகபட்சமாக ரூ.115க்கு விற்றது. கழிவு தக்காளி எல்லாம் காசாகும் நிலைக்கு மாறியுள்ளது. கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் படிக்கல் என்ற ஊரில் தக்காளியை பாலிதீன் கவரில் 'பேக்' செய்து கருவாடு விற்பது போல் விற்கின்றனர்.
இரண்டு தக்காளி கொண்ட பாக்கெட் ரூ.18க்கு விற்கிறது. ஒட்டன்சத்திரத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் காய்கறிவியாபாரிகள் இதனை தெரிவித்தனர்.

தமிழகம், கேரளாவில் பெய்து வரும் தொடர்மழையால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல காய்கறிகள் அதிகபட்ச விலைக்கு விற்பனையாகின்றன. தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்தவாறு உள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.15 முதல் 20 வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் மழை பெய்ய தொடங்கியதால் பந்தல் தக்காளி மட்டுமே தப்பிப் பிழைத்தது. தரையில் விளையும் தக்காளி முற்றிலும்அழிந்துவிட்டது. இதனால் மார்க்கெட்டிற்கு இந்த தக்காளி வரத்து 25 சதவீதமாக குறைந்தது. வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு தக்காளி ஏலம் எடுத்ததால் விலை கிடுகிடுவென அதிகரித்தது.

இரண்டு தக்காளி கொண்ட பாக்கெட் ரூ.18க்கு விற்கிறது. ஒட்டன்சத்திரத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் காய்கறிவியாபாரிகள் இதனை தெரிவித்தனர்.
வாசகர் கருத்து (7)
கடந்த ஆட்சியில் காட்டு கூச்சல் போட்ட விடியலு தக்காளி பிரச்சனைக்கு தீர்வு காணாம போட்டோ ஷூட் நடத்திக்கிட்டு இருக்காப்புல ...
தக்காளி, தக்காளியை பார்த்து பொறாமைப்படுகின்றன பெட்ரோல் மற்றும் டீசல்
இது தொடராது. கூடிய சீக்கிரம் "ஐரோபோனிக்" தக்காளி விளையும். அதை கம்மி ரேட்க்கு வியாபாரம் செய்வார்கள். இதனால் பாதிப்பு என்னமோ விவசாயிகளுக்கு தான் என தோன்றுகிறது.
பாலித்தீன் பைகளை ஏற்கனவே டுமில் நாட் அரசு தடை செய்ததே
இங்கு கிலோ 130 ரூபாய். இரண்டு பழம் வெறும் இருந்து ரூபாய் மட்டுமே. அதை நினைத்து 1.50 பைசா கொடுத்து ஒரு ஜெலுசில் மாத்திரை வாங்கி மெல்ல வேண்டியதுதான். 200 எம் எல் பாட்டில் விலை வெறும் 80 ரூபாய்தான். மதுரைக்கு வந்து மலையாளிகள் அள்ளி செல்லலாம்.