‛கோவின் இணையதளத்தில் புதிய வசதி
புதுடில்லி-ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதை, 'கோவின்' இணையதளத்தின் வழியாக சேவை நிறுவனங்கள் தெரிந்து கொள்ள புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி ஆர்.எஸ்.சர்மா கூறியதாவது:தனியார் நிறுவனங்கள், ஐ.ஆர்.சி.டி.சி., போன்ற அரசு அமைப்புகள் உள்ளிட்டவைக்கு, ஒருவரின் தடுப்பூசி நிலை பற்றி தெரிந்து கொள்வது மிகவும் கடினமாக உள்ளது.அதனால் அந்த நபர் கேட்கும் சேவையை வழங்குவதிலும் சிக்கல் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, கோவின் இணையதளத்தில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. கோவின் இணையதளத்தில் ஒருவரின் மொபைல் எண் மற்றும் பெயரை பதிவு செய்ய வேண்டும். அந்த மொபைல் எண்ணுக்கு நான்கு இலக்க ரகசிய எண் வரும். அந்த எண்ணை இணையதளத்தில் பதிவு செய்தால், அவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையை உடனடியாக அறியலாம். இவ்வாறு அவர் கூறினார்.


கோவின் இணையதளத்தில் ஒருவரின் மொபைல் எண் மற்றும் பெயரை பதிவு செய்ய வேண்டும். அந்த மொபைல் எண்ணுக்கு நான்கு இலக்க ரகசிய எண் வரும். அந்த எண்ணை இணையதளத்தில் பதிவு செய்தால் இவருக்கு தடுப்பூசி போடவில்லை என்றே வருகிறது ...ஆதார் என்னுடன் இணைப்பது நல்லது ...வெளிநாட்டு பயணம் செய்பவர்களுக்கு பாஸ்போர்ட் நம்பரை இணைப்பதும் நல்லது ..பெயரில் சிறிய தவறு இருந்தாலும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் தாட்சண்யம் காட்டுவதில்லை ..