வேலூர்: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் வீடு இடிந்து 9 பேர் பலியாகியுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பேரணாம்பட்டு பகுதியில் நேற்றிரவு (நவ.,18) தொடர்ந்து மழை பெய்தது. இதில், மழை காரணமாக அஜித்தா தெருவில் உள்ள இரு குடும்பத்தினர் ஒரே மாடி வீட்டில் தங்கியுள்ளனர். மழையால், இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 4 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட 9 பேர் பலியாகினர். கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். மீட்கப்பட்டவர்கள் பேரணாம்பட்டு, குடியாத்தம், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல பாண்டியன் மற்றும் வருவாய் துறையினர் மற்றும் போலீசார் மீட்பு பணியை ஆய்வு செய்தனர். இந்த கோர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிவாரணம்
இந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், படுகாயங்கமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிவாரண பணத்தை வைத்துக்கொண்டு எவ்வளவு நாட்கள் இறந்தவர்கள் குடும்பம் காலத்தை ஓட்டமுடியும்? இப்ப என்னவாகும் என்றால், அந்த நிவாரண பணத்தை பங்கு போட்டுக்கொள்வதில் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பிரச்சினை ஏட்படலாம். ஒன்று இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கலாம். அல்லது அவர்களுக்கு ஒரு தொழில் செய்ய வங்கி கடன் கொடுத்து உதவலாம்.
விடியலூ மத அடையாளத்தை பார்த்து தான் பொட்டி குடுப்பார்
ஆழ்ந்த அனுதாபங்கள்..... ஆனாலும் அனிதா நீட்டுக்காக தற்கொலை பண்ணிக்கொண்டு இரந்தப்ப எதிர்க்கட்சியாக இருந்த போதே உடனே நிவாரணம் கொடுத்தாரு..அரசியல் செஞ்சாரு விடியலு... இப்போ இந்த குடும்பத்தை சேர்ந்தவங்க மார்க்க சகோதரர் என்றவுடன் உடனே நிவாரத்தொகை அளித்து அரசியல் ... ஆனால் ஒருபெண் மாணவி ஒரு க்ரிப்டோ கிறிஸ்டியானால் அவனது பள்ளிக்கூட முதல்வரின் அனுமதியுடன் பாலியல் தொந்தரவுக்கு பயந்து தற்கொலை பண்ணி கொண்டார் ..ஆனால் அதற்க்கு எந்த நிவாரணமும் கொடுக்க வில்லை ...இந்த விடியல் .... என்ன ஒரு கேவலமான கேடுகெட்ட அரசியல்
செத்தவுங்க யாருன்னு பாத்து அஞ்சு லட்சம் கொடுக்கப்படும்.. விடியல் ஆட்சி..
இந்த நிவாரண பணத்தை வைத்துக்கொண்டு எவ்வளவு நாட்கள் இறந்தவர்கள் குடும்பம் காலத்தை ஓட்டமுடியும்? இப்ப என்னவாகும் என்றால், அந்த நிவாரண பணத்தை பங்கு போட்டுக்கொள்வதில் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பிரச்சினை ஏட்படலாம். ஒன்று இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கலாம். அல்லது அவர்களுக்கு ஒரு தொழில் செய்ய வங்கி கடன் கொடுத்து உதவலாம்.